கும்பகோணம், ஜன. 28 –

தமிழ்நாட்டில் நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடக்க விருக்கும் தேர்தலில், அரசியல் கட்சியினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதில் மும்மரமாக இருப்பார்கள், தேர்தல் அலுவலர்கள் பணம் கொண்டு செல்லும் வணிகர்களை மட்டும் குறிவைத்து பிடிப்பதை விட்டு விட்டு அரசியல் கட்சியினரையும் கண்காணிக்க வேண்டும் என்றும் கும்பகோணத்தில்; இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்ரமராஜா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

    கும்பகோணத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்ரமராஜா,

   தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில், கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் வேண்டும் என கடந்த 21ம் தேதி தமிழக முதல்வரை சந்தித்து முறையிடப்பட்டது அதன்பேரில், தற்போது இன்று முதல் திருக்கோயில்கள், வணிகநிறுவனங்கள், பள்ளி கல்லூரிகளுக்கும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது இதனை பாராட்டி வரவேற்று நன்றி தெரிவிக்கிறோம் என்றும், ஆன்லைன் வர்த்தகம் சமானிய தொழில்களை நசித்து, துடைத்தெறிந்து வருகிறது, தமிழக முதல்வர், தமிழகம் பொருளாதாரத்தில் முதல் இடத்தை பிடிக்க முயன்று வருகிறார், இதனை செயல்படுத்த, விவசாயிகள் விளைவித்த பொருட்கள் அனைத்தையும் வணிகர்கள் தான் சந்தைப்படுத்துகிறார்கள், மேலும் அரசிற்கு ரூபாய் ஒரு லட்சத்தி 20 ஆயிரம் கோடி அளவிற்கு ஜிஎஸ்டி வாயிலாக வருவாய் ஈட்டி தருவதும் வணிகர்கள் தான் என்றும் குறிப்பிட்ட அவர், பெரிய நிறுவனங்களால், சிறு குறு சாமானிய நிறுவனங்கள் நசுக்கப்படுவதை தடுத்து நிறுத்திட வேண்டும் என்றும், தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள படி, கும்பகோணத்தை தலைமையிடமாக கொண்ட புதிய மாவட்டம் குறித்த அறிவிப்பினை விரைந்து முதல்வர் வெளியிட வேண்டும் என்றும், நகர்புற உள்ளாட்சி தேர்தல் குறித்து விரைவில் சென்னையில் ஆட்சிமன்ற குழு கூட்டம் கூடி  முடிவு செய்யும் என்றும், தேர்தல் என்றாலே, வணிகர்களுக்கு தான் ஜூரம் ஏற்படும், காரணம், அரசியல் கட்சியினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதில் மும்மரமாக இருப்பார்கள், தேர்தல் அலுவலர்கள் பணம் கொண்டு செல்லும் வணிகர்களை மட்டும் குறிவைத்து பிடிப்பதை விட்டு விட்டு அரசியல் கட்சியினரையும் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்றும் விக்ரமராஜா மேலும் தெரிவித்தார்

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here