கும்பகோணம், ஜூன். 18 –

கும்பகோணம் அருகே உள்ள திருப்புவனத்தில் தனது வீட்டை சுத்தம் செய்யும் போது பாம்பு கடிபட்டவர் அரசு தலைமை மருத்துவமனைக்கு பாம்புடன் வந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

திருபுவனம் தோப்பு தெரு பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் மகன் ரமேஷ் (42) கூலி வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் இன்று  தனது வீட்டில் உள்ள பழைய பீரோவின் அடியில் சுத்தம் செய்து கொண்டிருக்கும் போது அங்கிருந்த கயிரின்  இடையே கடந்த கட்டுவிரியன் பாம்பு ரமேஷைக் கடித்துள்ளது. உடனே பாம்பை பிடித்து கொண்டு அவர் பாம்புடன் கும்பகோணம் அரசு தலைமை மருத்துவமனைக்கு வந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அதனைத்தொடர்ந்து மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்தனர். சிகிச்சைக்கு பின் ரமேஷ் நலமுடன் உள்ளார். பாம்புடன் மருத்துவனுக்கு வந்ததால் பரபரப்பு நிலவியது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here