சென்னை, டிச. 25 –

பெரும்பாக்கத்தில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த தனிப்படை போலீசார் காரில் கஞ்சா கடத்தி வந்த நபரை கைது செய்துஅவரிடம் இருந்து  30 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

சென்னை மடிப்பாக்கம் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட  பகுதியில் தொடர்ந்து கஞ்சா விற்பனையை தடுக்க தனிப்படை அமைத்து போலீசாரல் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இன்று அதிகாலை காரில் கஞ்சா கடத்தி வருவதாக பெரும்பாக்கம்  போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து தனிப்படை போலீசார் இன்று அதிகாலை பெரும்பாக்கம் தேவாலயம் சந்திப்பில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது ஆந்திரா மாநிலத்தில் இருந்து வந்த காரை மடக்கி சோதனை செய்தனர்.

காரில் வந்த நபர் முண்ணுக்குப்பின் முரணாக பேசியதால் அவரது காரை சோதனை செய்த பொழுது 30 கிலோ எடை கொண்ட கஞ்சா இருப்பது தெரிய வந்தது. பின்னர் அவரை கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து அவரிடம் நடத்திய விசாரனையில் ஆந்திரா மாநிலம் தடா பகுதியை சேர்ந்த பாலமுருகன் (33) என்பதும் ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வந்து சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது.

தொடர்ந்து பாலமுருகனிடம் இருந்து 30 கிலோ எடை கொண்ட கஞ்சா மற்றும் கஞ்சா கடத்தியதற்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here