கும்பகோணம், அக். 03

இந்தியாவின் சுதந்திர தினம், குடியரசு தினம், காந்தி ஜெயந்தி உள்ளிட்ட நாட்களில் தமிழகத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடைப்பெறுவது வழக்கமாகும்.

இக்கூட்டங்கள் கிராம ஊராட்சி மன்ற தலைவர்களால் கூட்டப்பட்டு அக்கூட்டத்தில், கிராம வளர்ச்சித் திட்டங்களை திட்டமிடுதல் மற்றும் செயல்படுத்தப்படுதல் பயனாளிகள், பொதுமக்களின் பங்களிப்பை மேம்படுத்துதல் மற்றும் சமூக தணிக்கைக்கு வழி வகுத்தல் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படும்.

அதன் தொடர்ச்சியாக நேற்று தமிழக முழுவதும் கிராமசபை கூட்டம் நடத்த தமிழக அரசு அனுமதி வழங்கியதைத் தொடர்ந்து, கிராம சபைக் கூட்டம் நேற்றுக் காலை 11 30 மணியளவில் துக்காச்சி கிராமத்தில் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்  தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் அரசு தலைமை கொறடா கோவி செழியன் வருவாய் துறை சமூக நலத்துறை வேளாண்துறை உள்ளிட்ட பல்வேறு துறை ரீதியான நடவடிக்கைகள் குறித்தும் வளர்ச்சித் திட்டங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

தொடர்ந்து கிராமத்தில் 18 வயது குறைவான குழந்தைகள் திருமணம் தடை செய்யப்பட்டுள்ளது. பெண் குழந்தைகளின் பாதுகாப்பை மேம்படுத்தும் நடவடிக்கைகள், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்பு நடவடிக்கைகள், குழந்தை தொழிலாளர் முறை தடை போன்ற பல்வேறு பிரச்சினைகளுக்கு நடவடிக்கைகள் மேற்கொள்வதுக் குறித்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முன்னதாக சமூக நலத்துறை தோட்டக்கலைத்துறை உள்ளிட்ட துறைகள் மூலம் வைக்கப்பட்டிருந்த சிறப்பு கண்காட்சி முகாம்களை மாவட்ட ஆட்சியர் மற்றும் அரசு கொறடா ஆகியோர் பார்வையிட்டனர். இந்நிகழ்ச்சியில் கோட்டாட்சியர் லதா, திருவிடைமருதூர் வட்டாட்சியர் சுசீலா,திருவிடைமருதூர் ஒன்றிய பெருந்தலைவர் சுபா திருநாவுக்கரசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here