காஞ்சிபுரம், மார்ச். 02 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்..
காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சி மாநகராட்சிக்கு உட்பட்ட சாலை தெருவில் அமைந்துள்ள இந்தியன் வங்கி ஏ.டி.எம். மையத்தின் முன்பாகவுள்ள பாதாள சாக்கடை கால்வாயில் இருந்து கழிவுநீர் வெளியேறுவதால் பொதுமக்கள் வங்கிக்கும் ஏ.டி.எம். மையத்திற்கும் செல்லும் அவர்கள் தங்கள் மூக்கை மூடிக்கொண்டும் அதிலிருந்து கழிவுநீரை மிதித் தபடி பெருத்த அருவருப்புடன் கடந்து செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் அதனைக் கண்டும் காணாமலும் மாநகராட்சி நிர்வாகம் மிகுந்த அலட்சியப் போக்கை கடைப்பிடிப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதியில் மிகுந்த பரபரப்புடனும் மேலும் மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள பகுதியிமான சாலை தெருவில் அமைந்துள்ள இந்தியன் வங்கிக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அங்கு வந்து செல்கின்றனர். அதுப்போன்றே அப் பகுதியில் உள்ள ஏ.டி.எம். மையத்திற்கும், பணம் எடுப்பதற்கு பொதுமக்கள் வருவதாக தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் இந்தியன் வங்கி வாயில் முன்பாகவும் அருகில் ஏடிஎம் மையம் அமைந்துள்ள நிலையில் ஏடிஎம் மையம் வாசல் பகுதியில் கழிவுநீர் மேனுவல் அமைக்கப்பட்டுள்ளது.
அவற்றிலிருந்து அதிக அளவிலான கழிவு நீர் வெளியேறுவதால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். மேலும் அப்பகுதியை அவர்கள் கடந்து செல்வதற்காக அக் கழிவுநீரை மிதித்தவாறும் துர்நாற்றம் தாங்க முடியாமல் வாந்தியெடுக்காத குறையாக மூக்கை பொத்திக் கொண்டு மிகுந்த சிரமத்துடன் செல்வதாக அவர்கள் புகார் தெரிவிக்கின்றனர். மாகரின் முக்கிய சாலைகளில் ஒன்றான அச்சாலையில் இருந்து வெளியேறும் கழிவுநீரை கட்டுப்படுத்தாமலும் அப்பிரச்சினையை கண்டும் காணாததது போல் யாரோ ஒருவரைப் போல் அலட்சியப் போக்கினை கடைப்பிடித்து வருவது மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்துவதாக குற்றம் சாட்டுகின்றனர்.
இனியாவது தங்களின் பொறுப்பினை உணர்ந்து உரிய நடவடிக்கையை விரைந்து எடுக்க வேண்டும் என அவர்கள் மேலும் மாநகராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுக்கின்றனர். பிரச்சினையை தீர்ப்பார்களா ? கோரிக்கையை துடைத்தெரிவார்களா ? என மேலும் அவர்கள் சலிப்புடன் கடந்து சென்றனர்.