படம் திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயக்குமார் ரூ. 9.99 இலட்சம் மதிப்பிட்டிலான குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை திறந்து வைக்கும் போது ...

மீஞ்சூர், மே. 18 –

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட தேவதானம் ஊராட்சி பகுதியில் உள்ள குமரசிறுளப்பாக்கம் கிராமத்தில் நாடாளுமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.9.99 லட்சம் மதிப்பீட்டில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் நிருவப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கான துவக்க விழா, பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் துரை சந்திரசேகர் தலைமையிலும், மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமி எட்டியப்பன், வட்டார வளர்ச்சி அலுவலர் குமார் உள்ளிட்டவர்கள் முன்னிலையிலும் நேற்று அக்கிராமத்தில் நடைப்பெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி. ஜெயக்குமார் அக்குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை மக்கள் பயன்பாட்டிற்காக தொடங்கி வைத்தார்.

மேலும் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயக்குமார் உரை நிகழ்த்தும் போது, வெகு நாட்களாக இப்பகுதியில் நிலவி வந்த குடிநீர் பிரச்சினை, இப்புதிய நிலையத் திறப்பின் காரணமாக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இப்பகுதி மக்களுக்கு கிடைக்கும் என அப்போது அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்வின் போது ஆரணி பேரூராட்சி துணைத் தலைவர் சுகுமார், காட்டுப்பள்ளி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் முனுசாமி, காங்கிரஸ் நிர்வாகிகள் தாரிக், முகமது அல்டாப், கல்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் பிரியங்காதுரைராஜ், உள்ளிட்டவர்களும் திரளான அக்கிராம கிராம பொதுமக்களும் உடனிருந்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here