கும்பகோணம், ஏப். 10 –

திமுக சார்பில் நிதிநிலை விளக்கப் பொதுக்கூட்டம் கும்பகோணம் சாரங்கபாணி கீழ வீதியில், தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் கல்யாண சுந்தரம் தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய திமுக பொருளாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டி ஆர் பாலு உலக நாடுகளில் ஜிஎஸ்டி வரி 12 சதவீதத்துக்கு மேல் இல்லாத நிலையில் நமது இந்தியாவில் மட்டும்தான் 28%  ஜிஎஸ்டி வசூலிக்கப்படுகிறது என்றும் பெட்ரோல் டீசல் மீதான வரியை ஜிஸ்டிக்குள்  கொண்டு வந்தாலும் 75 ரூபாய்க்கு வழங்க முடியுமா என வினா எழுப்பினார்.

திமுக மத்திய ஆட்சியில் அங்கம் வகிக்கும் பொழுது பெட்ரோல் டீசல் விலை உயராமல் பார்த்துக் கொண்டதாகவும், அப்போது 400 ரூபாய்க்கு விற்பனையான எரிவாயு சிலிண்டர் விலை, தற்போது பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் 1,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. என்றும் இலங்கையில் பொருளாதாரம் மிக மோசமடைந்து பொதுமக்கள் வீதியில் வந்து போராடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகத்திற்கு அகதிகளாக வருபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்றும் இலங்கையில் சீனா துறைமுகம் அமைத்து அங்கு சீனர்களை குடியமர்த்தி வருவதாகவும் இதனால் முதல் ஆபத்து தமிழகத்திற்கு என்றும் இதை மத்திய அரசு கண்டும் காணாதது போல் இருப்பதாகவும் டி ஆர் பாலு குற்றஞ்சாட்டினார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here