வியாசர்பாடி, டிச. 31 –
சென்னை வியாசர்பாடியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் அரசினர் கலைக்கல்லூரி முதுகலை சமூகப் பணி (MSW) துறையில் உள்ள மாற்றம் மன்ற 2024 ஆம் ஆண்டிற்கான மாணவ பொறுப்பாளர்கள் தேர்வு நடைப்பெற்று, அவர்களுக்கு புதிய பதவிகள் வழங்கப்பட்டது. அந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் முனைவர் வேணு பிரகாஷ் தலைமை தாங்கினார்.
அதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற சமூகப்பணிக்கான தொண்டு நிறுவனத்தின் ஆலோசகர் கீதா புதியப் பொறுப்பாளர்களுக்கு பேட்ச் வழங்கினார். பின்பு தொடர்ந்து உரை நிகழ்த்தும் போது, புதிய பொறுப்பாளர்கள் ஆற்ற வேண்டிய பொறுப்புகள் மற்றும் கடமைகள் குறித்து அறிவுறுத்தினார். அந்நிகழ்வின் நிறைவில் புதியக பொறுப்பேற்றுக்கொண்ட பொறுப்பாளர்கள் அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
மேலும் துறைத் தலைவர் முனைவர் மு. ராஜூ மேற்பார்வையில் பேராசிரியர் ஜெனிபர் ஆகியோர் அந்நிகழ்விற்கான அனைத்து ஏற்பாடுகளையும் வெகுச்சிறப்பாக செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து, மாணவர்கள் தங்கள் தனி மற்றும் கூட்டுத்திறனை வெளிப்படுத்திய கலைநிகழ்ச்சி நடைபெற்றது.