கும்பகோணம், பிப். 01 –

கும்பகோணம், அரசினர் கலைக்கல்லூரி கடந்தாண்டு அக்டோபர் மாதம் புவியியல் துறை உதவி பேராசிரியர் மாணவர்களை ஒருமையில் பேசியதாக கூறப்படும்  நிகழ்வினை கண்டித்து மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து, கல்லூரி கல்வி இயக்குனர் அவ்வுதவி பேராசிரியரை திருச்சி அரசு கலைக் கல்லூரிக்கு இடம் மாற்றம் செய்து உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் கடந்த 27 ஆம் தேதி மீண்டும் அந்த புவியியல் துறை உதவி பேராசிரியர் வடிவேல் மீண்டும் கும்பகோணம் அரசு கலைக் கல்லூரிக்கே மீண்டும் பணியிட மாற்றம் பெற்றுக் கொண்டு வந்துள்ளார்.

இதனையறிந்த புவியியல் துறை எம் எஸ் சி முதலாம் ஆண்டு மாணவர் கார்த்திக் தலைமையில் 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்லூரி வாசலில் மாணவர்களை ஒருமையில் பேசிய புவியியல் துறை உதவி பேராசிரியரை மீண்டும் இக்கல்லூரிக்குள் அனுமதிக்க மாட்டோம் என்று தெரிவித்து கல்லூரி வாயில் முன்பு தொடர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் கல்லூரி உதவிப் பேராசிரியர் பணியிடம் நீக்கம் செய்ய வேண்டும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றவாறு மாணவர்கள் முழக்கமிட்டவாறு தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here