தஞ்சாவூர், மே. 24 –

தம்பட்டம் செய்திகளுக்காக சாரு …

பெற்றோர்கள் குழந்தைகளுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய துரித உணவகத்தில் தயாரிக்கப்படும் பானிபூரி, கலர் கலந்த சிக்கன் 65 போன்ற உணவுகளை வாங்கி கொடுத்து குழந்தைகளை உற்சாகப்படுத்தாதீர்கள் எனவும் மேலும் பெரியவர்கள், சிறியவர்களுக்கு வழிக்காட்ட வேண்டும் என உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் சுப்ரமணியன் பெற்றோர்களுக்கு அறிவுறுத்திவுள்ளார்.

தஞ்சையில் சுற்றுலா வளர்ச்சி குழுமம் சார்பில் பள்ளி மாணவ. மாணவிகளுக்கு தஞ்சையின் உணவு பாரம்பரியம் குறித்த செய்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.

அதில் சோழர், நாயக்கர், மராட்டா. சௌராஷ்டிரா, பிராமின், பண்ணையார்கள் எந்த மாதிரியான உணவுகள் பயன்படுத்தினார்கள். தற்போது எந்த மாதிரியான உணவுகள் தஞ்சைக்கு பெருமை சேர்த்து வருகிறது என்பதை விளக்கும் வகையில் மராட்டா மட்டன் கோலா, கும்பகோணம் கடப்பா, கும்பகோணம் வடிகட்டி காஃபி, தஞ்சாவூர் சந்திரகலா, திருவையாறு அசோகா ஆகிய 5 விதமான உணவுகள் செய்முறை குறித்து வல்லுனர்களை கொண்டு மாணவ, மாணவிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட உணவு பாதுகாப்பு அலுவலர் சுப்ரமணியன், மாலை நேரத்தில் பானி பூரி என்ற உணவு அனைத்து இடத்திலும் எல்லோரும் வாங்கி சாப்பிடுறாங்க. பெரியவர்களும் அதை உற்சாகப்படுத்துறாங்க. அது ரொம்ப ரொம்ப கெடுதலான விஷயம் பானி பூரி மிக மோசமான இடத்தில் வைத்து விற்பனை செய்கிறார்கள். அது தரமாக இல்லை. பெரியவர்கள் சிறுவர்களுக்கு வழிகாட்டனும். கலர் சேர்க்கப்பட்ட சிக்கன் 65 சாப்பிட்டால் கேன்சர் வரும் என எச்சரித்தார்.

பெற்றோர்களாகிய நீங்கள் குழந்தைகளுக்கு தீங்கு விளைவிக்க கூடிய துரித உணவு வாங்கி தருவதை தவிர்க்க வேண்டும். என கேட்டுக்கொண்டார். கடைகளில் கண்ட நேரங்களில் பிரியாணி வாங்கி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அது ரொம்ப ரொம்ப கெடுதலான விஷயம். துரித உணவுகள் சாப்பிட கூடாது நமது பாரம்பரிய உணவுகள் நிறைய இருக்கிறது.

தஞ்சை மாவட்டத்தின் பாரம்பரிய உணவு புலவு சாதம். பருப்பு சாதம். மீன் வகைகள் சாப்பிடுவது நல்லது என்றார். தஞ்சையின் அழிந்து வரும் உணவு பாரம்பரியத்தை மீட்டு எடுக்கும் வகையில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் முத்துக்குமார். சோழர்  நாயக்கர்  மராட்டா. செளராஸ்டிரா பிராமின் பண்ணையார் எந்த மாதிரியான உணவுகளை கொண்டு வந்தார்கள.

தற்போது எந்த மாதிரியான உணவுகள் தஞ்சைக்கு பெருமை சேர்த்து வருகிறது என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நமது உணவை  போற்றி பாதுகாக்க வேண்டும் என்பதற்காக 5 விதமான உணவுகள் செய்முறை விளக்கம் அளிப்பதாக தெரிவித்தார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here