ராமநாதபுரம், நவ. 3- ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி மற்றும் கடலாடி ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட கிராமங்களில் மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவராவ் நேரடியாக சென்று கிராமங்களில் உள்ள ஊரணிகளில் மழைநீரை சேமித்து இட ஊரக வளர்ச்சித் துறை சார்ந்த அலுவலர்கள் மூலம் மேற்கொள்ளப் பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே கனமழை சூழ்நிலையை எதிர்கொள்ள ஏதுவாக மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் துரிதமாக மேற் கொள்ளப்பட்டன. எளிதில் மழைநீர் தேங்குவதற்கு வாய்ப்புள்ளதாக 39 பகுதிகளில் கண்டறியப் பட்டுள்ளன. இப் பகுதிகளில் மழை நீர் எளிதில் வழிந்தோட ஏதுவாக தற்காலிக கால்வாய் அமைத்தல் போன்ற பணிகள் அனைத்தும் 15 மண்டல அளவிலான குழுக்கள் அமைக்கப்பட்டு மேற் கொள்ளப்பட்டன. அதே போல அவசரகால சூழ்நிலையை எதிர்கொள்ள ஏதுவாக 23 பல்நோக்கு புயல் பாதுகாப்பு மைய கட்டடங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.இந்நிலையில் கடந்த சில நாட்களாக ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்தது. இதனை அடுத்து ஊரகப் பகுதிகளில் தேங்கிய மழை நீரை தற்காலிக வடிகால் அமைத்து அருகில் உள்ள கண்மாய் ஊரணி குளங்களில் சேமித்து அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளை சார்ந்த அலுவலர்கள் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது அந்த வகையில் கடலாடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள இதம்பாடல் சிக்கல் ஆகிய கிராமங்களும் திருப்புல்லானி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பனையடி ஏந்தல் கிராமத்திற்கும் நேரடியாக சென்று அந்தந்த கிராமங்களில் உள்ள ஊர் அணிகளில் மழைநீர் சேமித்து மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு செய்தார். ஆய்வினை தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் கண்மாய்கள் மற்றும் மோர் அணிகளில் உள்ள தண்ணீரின் அளவை தொடர்ந்து கண்காணிக்கவும் நீர்நிலைகளை கரைகளின் தன்மை குறித்து தொடர்ந்து ஆய்வு செய்து அடைப்பு ஏற்படாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற் கொள்ளவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வின் போது ஊராட்சிகளின் உதவி இயக்குனர் கேசவதாஸ் கடலாடி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உட்பட அரசு அலுவலர்கள், சிக்கல் ஊராட்சி எழுத்தர் ஜெயபால் சிக்கல் ஆகியோர் உடன் இருந்தனர்.