தஞ்சாவூர், மே. 24 –
தம்பட்டம் செய்திகளுக்காக சாரு…
கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறக்கப்படவுள்ளதால், மாணவர்களுக்கு புத்தங்கள் வழங்குவதற்காக, அந்தந்த பள்ளிகளுக்கு புத்தகங்கள் அனுப்பும் பணி தீவிரம்.
கோடை விடுமுறை தொடர்ந்து ஜூன் மூன்றாம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு புத்தகங்கள் வழங்குவதற்காக அந்தந்த பள்ளிகளுக்கு புத்தகங்கள் அனுப்பும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தஞ்சை கல்வி மாவட்டத்திலுள்ள 197 பள்ளிகளுக்கு ஒன்றாம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகளுக்கு பாடப் புத்தகங்கள் வழங்குவதற்காக சென்னையில் இருந்து வந்த பாடப்புத்தகங்கள் அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது.
தஞ்சை மேம்பாலம் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள சேமிப்பு கிடங்கில் இருந்து இந்த புத்தகங்கள் அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் நிறைவடைந்த பிறகு மாணவர்களுக்கு சீருடை, காலனி, புத்தகப்பை ஆகியவை அனுப்பும் மணி தொடங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.