சென்னை பல்லவரம் வட்டம் குன்றத்தூர் பேரூராட்சி சார்பில் டெங்கு பணி மற்றும் தூய்மையே சேவை விழிப்புணர்வு முகாம் சபேரூராட்சியின் செயல் அலுவலர் வெங்கடேசன் தலைமையில் நடைப்பெற்றது.

குன்றத்தூர்; நவ.15-

குன்றத்தூர் பேரூராட்சி செயல் அலுவலர் வெங்கடேசன் தலைமையில் இன்று டெங்கு கொசு ஒழிப்பு பணி மற்றும் தூய்மையே சேவை விழிப்புணர்வு முகாம் நடைப்பெற்றது. இம்முகாமிற்கு மதுத்துவர்கள், செவிலியர்கள், பள்ளி மாணவ, மாணவிகள், மகளிர் சுய உதவிகுழு பெண்கள், மற்றும் சமுக ஆர்வலர்கள், பொதுமக்கள் என நூற்றுக் கணக்கானோர் கலந்துகொண்டு சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்க அரசு செயல் திட்டத்தோடு சேர்ந்து ஒத்துழைப்போம். மழைநீர் சேமிப்பு தொட்டி கட்ட சொல்லியும் அதனால் எழும் பலன் பற்றியும் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவோம், மேலும் தடை செய்யப்பட்ட ஒருமுறை பயன் படும் நெகிழி பயன்பாட்டை தவிர்க்க மக்களிடம் எடுத்துரைப்போம் என்பது போன்ற உறுதிமொழி ஏற்றனர்.

மேலும் அதனை தொடர்ந்து பேரூராட்சி பகுதியின் பல்வேறு பகுதியில் மழைநீர் தேக்க பகுதிகளை கண்டறிந்து அங்கு கொசு ஒழிப்பு புகைமருந்து அடித்தல், மற்றும் தேங்கியிருக்கும் நீர்களில் ஆயில் மருந்துகள் தெளித்தல், காய்ச்சல் அறிகுறி தென்படும் மக்களுக்கு சோதனை நடவடிக்கை மற்றும் கசாயம் வழங்குதல் பேன்ற நடவடிக்கைகளை செயலர் தலைமையிலான குழு பணியினை மேற் கொண்டனர்.    

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here