தஞ்சாவூர், மே. 16 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு…
தஞ்சை மாவட்டத்தில் உயிரை பறிக்க க் கூடிய கொடிய நோயான டெங்கு பாதிப்புக் குறித்து இன்னும் கண்டறியப் படவில்லை எனவும், மேலும் டெங்குவால் பாதிக்கப்பட்டவரின் எண்ணிக்கையும் தற்போது குறைவாகவே உள்ளது என தஞ்சை மருத்துவக கல்லூரி மருத்துவமனை முதல்வர் பாலாஜி நாதன் தெரிவித்தார்.
தஞ்சை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் டெங்கு பரவல் அதிகமாக உள்ளது என மாநில சுகாதாரத்துறை அறிவித்துள்ள நிலையில் தஞ்சை மாவட்டத்தில் டெங்கு பரவல் தடுக்கும் நடவடிக்கையில் சுகாதாரதுறை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
டெங்கு பாதிப்பு குறித்து தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர் பாலாஜி நாதனிடம் கேட்ட போது அவர் நமக்கு அளித்த பேட்டியில்
தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில். 20 பெரியவர்கள் .12 குழந்தைகள் என 32 பேர் காய்ச்சல் காரணமாக உள் நோயாளியாக சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் அவர்களுக்கான டெங்கு பரிசோதனை முடிவுகள் வந்து விட்டன. இதில் ஒரு பெரியவர் இரண்டு குழந்தைகளுக்கு மட்டுமே டெங்கு உறுதிப்படுத்தப்பட்டு உள்ளதாக அப்போது அவர் தெரிவித்தார்.
மேலும் இராஜா மிராசுதார் மருத்துவமனையில் குழந்தைகளுக்கான டெங்கு வார்டில் 20 படுக்கை அறைகள உள்ளதாகவும், தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள பெரியவர்களுக்கான டெங்கு வார்டில் 50 படுக்கை வசதிகள உள்ளதாகவும், தற்போது டெங்கு பாதிப்பில் உள்ளவர்கள் நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளனர்.என தெரிவித்தார்.
மேலும் மழைக் காலம் என்பதால் வீடு, வீட்டை சுற்றி உள்ள பகுதிகளில் மழை நீர் தேங்கி இருப்பதால் பொதுமக்கள் சுற்றுப்புறச் சூழலை பாதுகாதது கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்ட அவர், மழைநீரில் உருவாகும் டெங்கு கொசு உற்பத்தி ஆவதால் மழைநீர் தேங்கி நிற்காமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டும என்றார்.
கொசுவை தவிர்ப்பதற்கு வீட்டின் ஜன்னலில் கொசு வலை பயன்படுத்த வேண்டும். கொசுவலைக்கு கீழ் படுத்து உறங்க வேண்டும். என ஆலோசனை வழங்கினார். கொசுக்கடியில் இருந்து பெரியவர்களையும், சிறியவர்களையும் பாதுகாப்பது நல்லது.
காய்ச்சல் வந்தவுடனேயே அவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து வர வேண்டும என அறிவுறுத்தினார். டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறியாக அவர்களுக்கு தாகம் அதிகமாக இருக்கும். அதனால் அந் நோயால் பாதிக்கப் பட்டவர்களுக்கு தண்ணீர் அதிகமாக கொடுக்க வேண்டும்.
மேலும் 3 முதல் 5 நாட்களில் காய்ச்சல் சரியாகி விட்டால் அது சாதாரண வைரஸ் காய்ச்சல்.எனவும் 5 நாட்களுக்கு மேல காய்ச்சல் இருந்தால் ரத்த பரிசோதனை செய்துக் கொள்வது அவசியம் ஆகிறது. உயிரை கொல்லக் கூடிய டெங்கு பாதிப்பு தஞ்சை மாவட்டத்தில கண்டறியப்படவில்லை டெங்கு பாதிக்கப்பட்டவரின் எண்ணிக்கையும் தஞ்சை மாவட்டத்தில் குறைவாகவே உள்ளது.
வரும் காலங்களில் கூடுதலாக இருக்காமல் இருப்பதற்கு மக்களுடைய ஒத்துழைப்பு மிகவும் அவசியம் எனவும், மக்கள் மற்றும் சுகாதார துறை இணைந்து பணிபாற்றினால் டெங்குவை பரவ விடாமல் தடுக்கலாமென அப்போது மருத்துவக் கல்லூரி முதல்வர் பாலாஜி நாதன் தெரிவித்தார்.