சென்னை, ஜூலை. 01 –

சென்னை பழைய மகாபலிபுரம் சாலை நாவலூர் சுங்கச்சாவடியில் கட்டண உயர்வை கண்டித்து தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் ஒரு பெண் உட்பட சுமார் 25 பேர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை பழைய மகாபலிபுரம் சாலை உள்ள நாவலூரில் அமைந்துள்ள சுங்கச்சாவடியில் இன்று முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர உள்ளதாக அறிவித்துள்ளனர்.

இதனை கண்டடித்து தமிழக வாழ்வுரிமை கட்சியின் செங்கல்பட்டு தெற்கு மாவட்டம் சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ஆர்.கே.மணி தலைமை தாங்கினார். ஓ.எம்.ஆரில் உள்ள நாவலூர் சுங்கச்சாவடி அருகில் ஒரு பெண் உட்பட சுமார் 25 பேர் கையில் பதாகைகளை ஏந்தியவாறு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்பொழுது சுங்கச்சாவடி எங்களுக்கு தேவையில்லை என மத்திய அரசை கண்டித்தும், ஏழைகளின் வயிற்றில் அடிக்காதே என்றும் முழக்கமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இறுதியில் கலந்துக் கொண்ட திருப்போரூர் தொகுதி விசிக எம்எல்ஏ எஸ்.எஸ்.பாலாஜி ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார். பின்னர் பேசுகையில் சென்னையை ஒட்டியுள்ள இந்த சுங்கச்சாவடி அகற்றுவது குறித்து தமிழக நெடுஞ்சாலைத்துறை அமைச்சரிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளதாகவும்,  அதேப் போல் சட்டமன்றத்தில் சுங்கச்சாவடி அகற்றுவது குறித்து பேசியுள்ளதாகவும், நீங்கள் மனு கொடுத்தால் அதையும் சட்டமன்றத்தில் கோரிக்கை மனுவாக முன் வைக்கின்றேன் என்று கூறினார்.

இன்று முதல் உயர்த்தப்படும் சுங்கச்சாவடி கட்டண விலை உயர்வு பின்வருமாறு :-

ஒருமுறை சென்றுவர நான்கு சக்கர வாகனங்களுக்கு முந்தைய கட்டணம் 30 ரூபாய் இருந்த நிலையில் தற்போது 33 ரூபாயாக ஆக உயர்ந்துள்ளது.

அதேபோல் இலகு ரக வணிக வாகனங்களுக்கு 49 ரூபாய் கட்டணம் இருந்த நிலையில் 54 ரூபாயாக உயர்ந்துள்ளது.

பேருந்துகளுக்கு தற்போது 78 ரூபாய் இருந்த நிலையில் 86 ரூபாயாக உயர்ந்துள்ளது.

சரக்கு வாகனங்களுக்கு 117 ரூபாய் இருந்த நிலையில் 129 ரூபாயாக உயர்ந்துள்ளது.

பல அச்சு வாகனங்களுக்கு 234 ரூபாய் இருந்த நிலையில் 258 ரூபாயாக உயர்ந்துள்ளது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here