காஞ்சிபுரம், ஜன. 5 –

தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கன மழையால் பல்வேறு மாவட்டங்களில் விவசாய பயிர்கள் மற்றும் வீடுகளும் பாதிக்கப்பட்டு சேதமடைந்தன.

இந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கும், வீடுகளுக்கும் நிவாரணம் வழங்கிய கோரி காஞ்சிபுரம் ஆட்சியர் அலுவலகம் அருகே காவாலன் கேட் பகுதியில் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்களை  எழுப்பி விவசய சங்கத்தினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெல்லிற்கு ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய், கரும்பு மற்றும் காய்கறிகள் பாதிப்புக்கு ஏற்றவாறு நிவாரணம் வழங்க கோரியும், மழையின் போது வேலை,  வருமானயின்றி உள்ள ஏழை குடும்பத்திற்க்கும் மற்றும் இருளர் இன மக்களுக்கு 10 ஆயிரம் வழங்க கோரியும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here