குத்தாலம், மே. 23 –

தம்பட்டம் செய்திகளுக்காக சந்திரசேகர்…

வைகாசி திருவிழாவை முன்னிட்டு குத்தாலம் ஸ்ரீ பொன்னியம்மன், அருள்மிகு கருபன்னசாமி ஆலயத்தின் 38 ஆம் ஆண்டு பால்குடம் காவடி திருவிழா வெகுசிறப்பாக நடைப்பெற்றது அவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம், திரு துருத்தி எனும் குத்தாலம் செங்குந்தர் வீதியில் எழுந்து அருள்பாலித்து வரும் அருள்மிகு பொன்னியம்மன், மற்றும் கருப்பன்ன சாமி ஆலய வைகாசி திருவிழாவை முன்னிட்டு, 38.ம் – ஆண்டு பால்குடம், காவடி திருவிழா நடைபெற்றது. முன்னதாக காவிரி கரையிலிருந்து, ஒரு வாரம் விரதமிருந்து காப்பு கட்டியவர்கள் பால்குடம், காவடி எடுத்து.முக்கிய வீதிகள் வழியாக மேள தாலம் முழங்க வானவேடிக்கைகளுடன் கோயிலை வந்தடைந்தது. பின், பொன்னியம்மனுக்கும்,. கருபன்ன சாமிக்கு பால் அபிசேகம் நடைபெற்று, சிறப்பு அபிசேக ஆராதனைகள் நடைபெற்றது இந்த பாலகுட காவடி திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனின் அருளை பெற்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here