திருத்துறைப்பூண்டி, மார்ச். 31 –
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே உள்ள விட்டுகட்டி கிராமத்தில் உள்ள வடக்குதெருவில் வசித்து வருபவர் சந்திரமோகன் மேலும் இவருக்கு கறவை பசு உள்ளது.
மேலும் இவரது பசுமாடுகள் மேய்ச்சலுக்காக வயல்களுக்கு சென்று பின்பு மாலை வீடு வந்து சேர்வது வழக்கமாக இருந்து வருகிறது. அதுப்போன்று இன்றும் மேய்ச்சலுக்காக வயல்வெளிக்கு சென்ற அப்பசுமாடு அப்பகுதியில் உள்ள குட்டைக்குள் தடுமாறி விழுந்து சேற்றில் சிக்கிக் கொண்டது.
மேலும் அக்குட்டையில் சேறு அதிகமாக இருந்ததால் அப்பசுவால் வெளியே வரமுடியாமல் தவித்து வந்துள்ளது. அதனைக் கண்ட அங்கிருந்தவர்கள் திருத்துறைப்பூண்டி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அத்தகவலறிந்து நிலைய அதிகாரி பொறுப்பு முருகவேல் தலைமையில் ஒரு குழுவாக வந்த தீயணைப்பு துறையினர், சேற்றில் சிக்கிய பசுமாட்டை வெகு நேரப் போராட்டத்திற்கு பின் அப்பசு மாட்டினை பத்திரமாக அக்குட்டைச் சேற்றில் இருந்து பத்திரமாக மீட்டெடுத்தனர். அந் நிகழ்வினைக் கண்ட அப்பகுதி வாசிகள் தீயணைப்பு துறையினரை வெகுவாக பாராட்டினார்கள்.