சென்னை, நவ. 15 –

தேசிய தடுப்பூசி திட்டத்தின் கீழ் இந்தியா இதுவரை 112.34 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தியுள்ளது. இந்தியாவில் கொவிட் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 1,34,096 இது கடந்த 523 நாட்களில் அதாவது 17 மாதங்களில் இது மிகவும் குறைந்த அளவு என மத்திய சுகாதாரத் துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.

கொவிட் சிகிச்சைப் பெறுபவர்களின் சதவீதம் மொத்தப் பாதிப்பில் 1 சதவீதத்துக்கும் கீழ் குறைந்து தற்போது 0.39 சதவீதமாக உள்ளது. கடந்த 2020 மார்ச் மாதத்திற்கு பின் இது மிகக் குறைந்த அளவு ஆகும்.

மேலும், குணமடைந்தோர் விகிதம் தற்போது 98.26 சதவீதம் ஆகும், கடந்த 24 மணி நேரத்தில் 11,926 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 3,38,49,785 என அதிகரித்துள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 10,229 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. தினசரி பாதிப்பு விகிதம் 1.12, இது கடந்த 42 நாட்களாக 2 சதவீதத்துக்கும் குறைவாக உள்ளது. அதுப்போன்று வாரந்திர பாதிப்பு விகிதம் 0.99 ஆகும். இது கடந்த 52 நாட்களில் 2 சதவீதத்துக்கும் குறைவாக உள்ளது. இதுவரை மொத்தம் 62.46 கோடி கொவிட் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன எனவும் தெரிவித்துள்ளது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here