மீஞ்சூர், ஏப். 13 –

மீஞ்சூர் ஒன்றிய வன்னிப்பாக்கம் ஊராட்சி பள்ளிக்கு புதிய கட்டடம் கட்ட பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 22 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து,  வழக்கறிஞர் துரை சந்திரசேகர் எம்எல்ஏ வன்னிப்பாக்கம் கிராமத்தில் புதிய பள்ளி கட்டிடம் அமைக்கப்பட உள்ள இடத்தினை ஆய்வு மேற்கொண்டார்.

 

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதி மீஞ்சூர் ஒன்றியத்தில் அடங்கிய வன்னிப்பாக்கம் கிராமத்தில் சொந்த பள்ளி கட்டிடம் இல்லாமல் மாணவர்கள் மரத்தடியிலும் .வாடகை கட்டிடத்தின் மொட்டை மாடியில் பிளாஸ்டிக் பைகளைக் கொண்டு கூரைகள் அமைத்து கல்வி பயின்று வருகின்றனர். அதுக்குறித்து அவ்வூர் மக்கள், கல்வியாளர்கள், மற்றும் சமூகஆர்வலர்கள் என அனைவரும் வெகு நாட்களாக எம்எல்ஏ உள்ளிட்ட மாவட்ட கல்வி மற்றும் நிருவாக துறைகளுக்கு புகார் தெரிவித்து வந்த நிலையில், அப்புகார் குறித்த உண்மைத் தன்மையை கண்டறிய கள ஆய்வு மேற் கொண்டு நேற்று தம்பட்டம் நாளேடு வாயிலாக செய்தி வெளியிட்டோம். அதன் எதிரொலியாக இன்று பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் துரை சந்திரசேகர் வன்னிப்பாக்கம் கிராமத்திற்கு நேரடியாக சென்று அங்கு  முன்னதாக இருந்த பழைய பள்ளி கட்டிட சீரமைப்புப் பணிக்காக இடித்த இடத்தையும் .மரத்தடியில் கல்வி பயிலும் மாணவர்களையும். மற்றும் ஆசிரியர்களையும். ஊராட்சியின் தலைவர் உள்ளிட்டவர்களையும் நேரில் சந்தித்து ஆய்வு மேற்கொண்டார்.

மேலும் அப்பகுதியில் 1 முதல் 5 வரை படிக்கும் பள்ளி மாணவர்களின் நலன் கருதி உடனடியாக புதிய பள்ளிக் கட்டிடம் அமைக்க சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து  ரூ 22 லட்சம் ஒதுக்கீடு செய்து   கட்டிடம் அமைக்க ஆணை பிறப்பித்தார். அதனைக் கண்ட ஆசிரியர்கள், மாணவர்கள், ஊராட்சி மன்ற தலைவர், மாணவர்களின் பெற்றோர்கள், கல்வியாளர்கள், மற்றும் சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட திரளானோர் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்ட சட்டமன்ற உறுப்பினருக்கு நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப் படுத்தினார்கள்.

மேலும், இதுப்போன்று மீஞ்சூர் ஒன்றியத்தில் உள்ள அரசு ஊராட்சி ஆரம்ப நிலைபள்ளிகள் உட்பட பலப் பள்ளிகளின் கட்டங்கள் இடிக்கப்பட்டு இன்னும் ஆரம்ப நிலை கட்டடப் பணிகள் மேற்படாமல் உள்ளதையும் சட்டமன்ற உறுப்பினரிடம் சுட்டிக்காட்டி அதற்கான கள ஆய்வுகளையும் விரைவாக மேற்கொண்டு தமிழக அரசின் திராவிட மாடல் நோக்கத்தையும், தமிழக முதல்வரின் அனைவருக்கும் கல்வி குறிப்பாக பெண்களின் கல்வி மேம்பாட்டை உயர்த்தல் கனவினை சிறப்பிக்கும் வகையில் நடவடிக்கை எடுத்திட வேண்டி கோரிக்கையையும் விடுத்தனர். அதனை கனிவுடன் கேட்டுக்கொண்ட எம்.எல்.ஏ அப்பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக அவர்களிடம் தெரிவித்தார்.

பள்ளியை இடித்து ஏழுமாதமாகியும் கட்டடப்பணிகள் தொடங்கப்படாத மீஞ்சூர் ஒன்றிய வன்னிபாக்கம் ஊராட்சி ஆரம்பப்பள்ளி : கொளுத்தும் வெயிலில் வேர்வை சொட்ட மரத்தடியில் அமர்ந்து கல்விப் பயலும் மாணவர்கள் !

 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here