கும்பகோணம், அக். 30 –

கும்பகோணம் அருகே அம்மாபேட்டையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை கண்டித்து மாட்டு வண்டியில் இருச்சக்கர வாகனத்தை கட்டி இழுத்துக் கொண்டும் சமையல் எரிவாயு உருளைய் பாடைக்கட்டி எடுத்துச் சென்றும் நூதன முறையில் கண்டன ஆர்ப்பாட்ட ஊர்வலம் நடைபெற்றது

கும்பகோணம் அருகே அம்மாபேட்டையில், தொடர்ந்து பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உள்ளிட்ட விலைவாசி உயர்வை கண்டித்து மாட்டு வண்டியில் இருசக்கர வாகனத்தை கட்டி இழுத்துக் கொண்டும், சமையல் எரிவாயு சிலிண்டருக்கு பாடை கட்டி தூக்கி கொண்டும் தப்படித்தும் சைக்கிளில் ஊர்வலமாக பேரூராட்சி முக்கிய வீதிகளில் ஊர்வலமாக முழக்கங்கள் எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர்  செந்தில்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தை  மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் தில்லைவனம், துவக்கி வைத்தார்.

ஆர்ப்பாட்டத்தில் தமிழ்மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் பாலு,  ஒன்றிய துணைச் செயலாளர்  குருமூர்த்தி, ஒன்றிய பொருளாளர் தாமரைச்செல்வி, ஒன்றிய நிர்வாகிகள்  உத்திராபதி கண்ணன் ராஜா மாணிக்கம் , காமாட்சி, செல்வம் ,சாந்தி திருநாவுக்கரசு, சுதாகர், லதா, சத்யசீலன், லெட்சுமணன், உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு  பேரூராட்சியின் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக சென்று பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு விலை உயர்வை கட்டுப்படுத்த கோரி கண்டன முழக்கங்களை எழப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here