மாங்காடு, டிச. 20 –
மாங்காடு 11 ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி கடிதம் எழுதி வைத்து விட்டு தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்ட வழக்கில் கல்லூரி மாணவன் விக்னேஷ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மாங்காடு சக்தி நகரை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (45), இவர் இந்தியன் வங்கியில் கிளர்க்காகப் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி கீதா இவர்களுக்கு வரலட்சுமி (20), கலையரசி (என்ற) நந்தினி (17), என்ற 2 மகள்கள் உள்ளனர். வரலட்சுமி தனியார் கல்லூரியில் நர்சிங் படிப்பு படித்து வருகிறார். நந்தினி பூந்தமல்லியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் காலை வழக்கம்போல் பன்னீர்செல்வம் வேலைக்கு சென்று விட்டார் அவரது தாய் மற்றும் மகள் மட்டும் வீட்டில் இருந்தனர். தாய் கீதா கடைக்கு சென்று விட்டு திரும்பி வந்து பார்த்த போது அறைக்குள் சென்ற நந்தினி நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை கதவை தட்டியும் திறக்காததால் அக்கம், பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது நந்தினி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டு இறந்த நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து மாங்காடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்து போன நந்தினி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கடந்த சில தினங்களாக நந்தினி தனக்கு நெருக்கமான தோழிகளிடம் பேசாமல் புதிய தோழிகளிடம் பேசியதாகவும் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
மேலும் இவர் எழுதிய ஒரு கடிதம் ஒன்று சிக்கியது அதில் யாரையும் நம்ப கூடாது என உருக்கமாக எழுதி இருந்ததாகவும் தற்கொலைக்கான காரணம் ஏதும் குறிப்பிடப்படவில்லை என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் நந்தினியின் தற்கொலைக்கு காரணம் குறித்து தொடர்ந்து போலீசார் விசாரித்து வந்த நிலையில் கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார். கல்லூரி மாணவர் விக்னேஷ் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கடிதம் எழுதி வைத்து விட்டு நேற்று முன்தினம் தற்கொலை செய்து கொண்ட பள்ளி மாணவி, அதிக முறை செல்போனில் பேசிய தொலைபேசி எண்ணை வைத்து துப்புத்துலக்கிய போலீஸ் மாணவரை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.