செங்கல்பட்டு, ஏப். 26 –
செங்கல்பட்டு அடுத்துள்ள மேலேரிபாக்கம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின் ஜன்னல் கம்பியை உடைத்து இரு மர்ம நபர்கள் கொள்ளையடிக்க முயற்சி செய்த போது, அவ்வங்கியில் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு எச்சரிக்கை அலாரம் ஓசையெழுப்பியது, அதனால் அவர்கள் இருவரும் அங்கிருந்து தப்பித்து ஓட்டம் பிடித்துள்ளனர்.
இத்தகவலறிந்து செங்கல்பட்டு தாலுகா போலீசார் விரைந்து வந்து விசாரணை மற்றும் கை ரேகை நிபுணர்கள் வரைவழைக்கப்பட்டு அக்கொள்ளையில் ஈடுப்பட முயன்ற மர்ம நபர்களின் கை ரேகை தடயங்களை சேகரித்து வருகின்றனர்.
மேலும் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு எச்சரிக்கை அலாரம் ஓசையெழுப்பியதால் அங்கிருந்த பல கோடி மதிப்பிலான பணம், நகைகள் அதிர்ஷ்டவசமாக தப்பியதாக தெரிய வருகிறது.





















