திருவாரூர், ஏப். 04 –

திருவாரூர் மாவட்டத்திற்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் பள்ளி கல்லூரி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வருகை தந்தனர்.

மேலும் அதனைத்தொடர்ந்து முதலில் பல்வேறு திட்டங்கள் குறித்த திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் சாருஸ்ரீ தலைமையில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் பங்கேற்றனர்.

மேலும் அதனைத்தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அப்போது,

பல்வேறு திட்டங்கள் குறித்து மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றதாக தெரிவித்தார். மேலும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் நிலக்கரி எடுக்க அனுமதிக்கப்பட மாட்டாது. எனவும் மேலும் அதுக்குறித்து நாளை சட்டமன்றத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் அறிவிப்பு வெளியிடுவார் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

மேலும் இன்று திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைப்பெற்ற ஆய்வுக் கூட்டத்தில் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் டிஆர்பி ராஜா திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் நாகை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ் மற்றும் அரசு உயர்நிலை அலுவலர்கள் பங்கேற்றனர்.

 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here