பொன்னேரி, ஜூலை. 06 –

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி நகராட்சியில் உள்ள 27 வார்டுகளில்  18 வார்டுகளில் பாதாள சாக்கடை பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் தாமதமாக பணிக்காரணமாகவும் சரியான திட்டம் இல்லாமல் நகரின் ஒட்டு மொத்த பகுதிகளிலும் ஒரே நேரத்தில் பணி நடைப்பெற்று வருவதால் சாலை உள்ளிட்ட கட்டமைப்பு பணிகள் பாதிக்கப்பட்டு வருவதாகவும், அதனால் அடிக்கடி அப்பகுதியில் விபத்துகள் நடந்து வருவதாகவும் மேலும் இதனால் பொதுமக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். எனக்கூறி பொன்னேரி நகராட்சி துணை தலைவர் விஜயகுமார், மற்றும் வார்டு கவுன்சிலர்களோடு நகராட்சி அலுவலக நுழைவு வாயில் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

மேலும் இப்பிரச்சினைகள் குறித்து பலமுறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் கூட நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டினார். தொடர்ந்து, இச் சாலைகளை சீரமைக்கும் வரை தாம் தர்ணா போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் தெரிவித்து தொடர்ந்து இரண்டு மணி நேரம் வரை இப்போராட்டம் நீடித்தது. இந்நிலையில் போராட்டத்தினை கைவிடக்கோரி பொன்னேரி நகராட்சி அலுவலர்கள், மற்றும் காவல் துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதனையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. இதனால் பொன்னேரி நகராட்சி அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here