பொன்னேரி, பிப். 26 –
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் புரட்சி பாரதம் கட்சியின் திருவள்ளூர் வடக்கு மாவட்டம் சார்பில் புரட்சி விதைகளின் பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
இப்பயிற்சி வகுப்பில், தலித் மக்களின் வாழ்க்கை முறைகள், முன்னேற்றங்கள், அரசியல் அமைப்பில் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட உரிமைகள், மேலும் தற்போது அரசு திட்டங்களில் பெறக்கூடிய சலுகைகள், இதற்காக புரட்சி பாரதம் கட்சியில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், போன்றவைகள் குறித்தும், மேலும் தொடர்ந்து புரட்சி பாரதம் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தலித் மக்களுக்கு ஆற்ற வேண்டிய பணிகள் குறித்தும், அதனைத் தொடர்ந்து எதிர் வரும் நாடாளுமன்ற தேர்தலுக்குள் அக்கட்சி முன்னெடுக்க வேண்டிய செயல்பாடுகள் குறித்தும் இப்பயிற்சி வகுப்பில் புரட்சி பாரதம் கட்சியின் மாநில செயலாளர் பாரதிதாசன், மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் ராஜா ஆகியோர் விரிவாக எடுத்துரைத்தனர். மேலும் இப்பயிற்சி வகுப்பில் பொன்னேரி பகுதியைச் சேர்ந்த புரட்சி பாரதம் கட்சியின் நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.























