கும்பகோணத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 72-வது பிறந்த நாளை முன்னிட்டு பட்டாசு வெடித்து கேக் வெட்டி 72 நபர்களுக்கு ரூபாய் 1000 மதிப்பில் அரிசி மளிகை பொருட்கள் காய்கறிகள் வழங்கி ரசிகர்கள் கொண்டாடினார்கள்.

கும்பகோணம், டிச. 12 –

இன்று தமிழ்திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 72 பிறந்த தினமாகும். தமிழ் திரையுலகில் தனக்கென தனி இடத்தை பிடித்து சூப்பர் ஸ்டாராக மக்களின் மனதில் இடம் பிடித்துள்ள நடிகர் ரஜினிகாந்த்  இவர் 40 வருடங்களாக தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகனாக திகழ்ந்து வருகிறார். இதுவரை இவர் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், தெலுங்கு  என 170க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். இதையொட்டி, உலகம் முழுவதும் இவருக்கு பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது. அவரது பிறந்த தினத்தை சிறப்பிக்கும் வகையில் அவரது ரசிகர்கள் ஏழை எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி கொண்டாடி வருகிறார்கள்.

அதன் ஒரு பகுதியாக பருத்திக்கார தெருவில் ரஜினிகாந்தின் 72-வது பிறந்த நாளை முன்னிட்டு பட்டாசு வெடித்து 7 கிலோ கேக் வெட்டி ரூபாய் 1000 மதிப்பில் 72 நபருக்கு அரிசி மளிகைப் பொருட்கள் காய்கறிகளை ரஜினி ரசிகர் மன்ற பொறுப்பாளர் மனோஜ் பாபு தலைமையில் வழங்கப்பட்டது. தொடர்ந்து மதியம் 172 நபர்களுக்கு சிக்கன் பிரியாணி வழங்கப்படுகிறது. நிகழ்ச்சியில் ஐக்கிய அரபு அமீரகம் துணைச்செயலாளர்கள் லெனின் குமார் கிஷோர் குமார் சாமிநாதன் மற்றும் நிர்வாகிகள்  ரஜினி ரசிகர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார்கள்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here