மீஞ்சூர், ஏப். 24 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் இளங்கோ …

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்துவுள்ள நெய்தவாயல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக சிறப்பாக பணியாற்றி இன்று பணி ஓய்வு பெறும் ஜெயந்திக்கு பணி நிறைவு மற்றும் பாராட்டு விழா அப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

மேலும் இந்நிகழ்ச்சியில் தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் என திரளானவர்கள் கலந்துக் கொண்டு அவ்விழாவினைச் சிறப்பித்தார்கள்.

மேலும் அதில் உரை நிகழ்த்திய ஆசிரியர்கள் அவர் ஆற்றிய சிறப்பான பணிகள் குறித்து எடுத்துரைத்து, அவருக்கு புகழாரம் சூட்டினார்கள். மேலும் தலைமையாசிரியர் ஜெயந்திக்கு பொன்னாடை அணிவித்தும், நினைவுப் பரிசு வழங்கியும் வாழ்த்துக்கள் தெரிவித்தார்கள்.

அதனைத் தொடர்ந்து, ஓய்வு பெறும் தலைமை ஆசிரியை ஜெயந்தி ஏற்புரை நிகழ்த்தி அனைவருக்கும் நனது நன்றியையும் நினைவு பரிசும் வழங்கி உடன் பணியாற்றிய ஆசிரியர்களை கௌரவப்படுத்தினார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here