ஆவடி, ஆக. 13 –
செய்தி சேகரிப்பு ஆவடி ராஜன்
ஆவடி மாநகராட்சி பகுதிகளில் இன்று காலை வீதிகளில் குப்பையை சேகரிக்கும் பணி நடைபெற்றது. பின் தொகுத்து எடுத்து வந்த குப்பை லாரி மாநகராட்சியின் அருகே உள்ள இந்தியன் பெட்ரோல் பங்க் அருகில் வரும் போது லாரியில் சேகரிக்கப் பட்ட குப்பையில் இருந்து திடீரென புகை மூட்டத்துடனான தீ பற்ற ஆரம்பித்தது.
அப்போது, அச்சாலையில் சென்ற வாகன ஒட்டிகள் மற்றும் பாதசாரிகள் அதனைப் பார்த்து அச்சம் கொண்டு அலரல் குரல் எழுப்பினர். அதனை அறிந்த வாகன ஒட்டுனர் சாமர்த்தியமாக சூழலை புரிந்துக் கொண்டு வாகனத்தின் வேகத்தைக் குறைத்து தீ பரவல் வேகத்தைக் கட்டுப் படுத்தும் விதமாக வாகனத்தை அப்படியே நிறுத்தி விட்டார்.
அப்போது அவ்வழிச் சென்ற பாதசாரி ஒருவர் தண்ணீர் கேனில் தண்ணீர் எடுத்து வந்து கொடுக்க அவ்வாகனத்தில் வந்த தூய்மைப் பணியாளர்கள் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். எப்போதும் அச்சாலையில் கூட்ட நெரிசல் அதிகம் காணப்படும் பகுதியாகும் மேலும் வாகனப் போக்குவரத்தும் அதிகமாக இருக்கும். ஆனால் இச்சம்பவம் நடக்கும் போது போக்குவரத்து நெரிசல் இல்லாததால், வாகன மோதல்கள், பொருள் சேதம் மற்றும் உயிர் சேதமும் அதிஷ்டவசமாக இல்லாதுப் போனது. என்பது குறிப்பிடத் தக்கது.
பொதுவாக தூய்மைப் பணி செய்து வரும் ஊழியர்களுக்கு ஒப்பந்த தார ர்கள் எந்த வித பாதுகாப்பு உடமைகளையும் ( கை, மற்றும் காலனிகள் முக க் கவசம் )வழங்காமல் அவர்களுக்கு நொய் தொற்று ஏற்படும் அளவிலான பாதுகாப்பற்ற தன்மையிலயே அவர்கள் பணி செய்திடும் சூழ்நிலையை க்ஷற்படுத்தி வைத்துள்ளனர் . மேலும் , அவர்கள் உயிர் மற்றும் உடலுக்கு பாதுகாப்புக்கான உத்திரவாதத்தை அளித்திடாமல் அலட்சியப் போக்கு கொண்ட மன நிலையிலயே உள்ளனர்.
ஒப்பந்த தாரர்களின் அலட்சியப் போக்கினால் அவர்கள் தலைமையில் பணி புரியும் ஊழியர்களிடமும் அதே நிலை நீடித்து வருகிறது. இச் சம்பவத்திற்கு காரணம் பணியாளர்கள் சிகரெட் டைக் குடித்து விட்டு தீயை அணைக்காமல் அலட்சியத்தில் அப்படியே போட்டு விட்டார்களா ? அல்லது அணைக்காமல் போடப்பட்ட பீடி மற்றும் சிகிரெட் துண்டுகளை குப்பையுடன் அள்ள போட்டு விட்டார்களா ? என்ற கேள்விகளோடு கூட்டத்தினரிடையே பல்வேறு கருத்துக்களை மக்கள் பகிர்ந்துக் கொண்டனர். இது குறித்து மாநகர சுகாதார மேற்பார்வையாளர்கள் மற்றும் உயர் அலுவலர்கள் உடனடி நடவடிக்கை எடுத்து உரிய பாதுகாப்புடனும் அலட்சியம் நீக்கி பணியில் அவர்கள் ஈடுபடும் படி கவனம் செலுத்த வேண்டும் என்று அவ் விபத்தின் போது அங்கிருந்த பொது மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இவ்வாறு குறிப்பிடுகிறார்கள்.