கும்பகோணம், மார்ச். 16 –

கும்பகோணத்தில் தாராசுரம் அறிஞர் அண்ணா நேரு காய்கறி சந்தையில், பிளாஸ்டிக் பயன்பாட்டினை தவிர்த்திடவும் மேலும் நகரத்தினை சுத்தமாகவும் பாதுகாப்புடனும் வைத்திருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாகவும், மேலும் பிளாஸ்டிக் பயன்பாட்டால் விளையக்கூடிய தீமைகளை அகற்றிடும் விதமாகவும், மேலும் அதுக்குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தும் ஒருப்பகுதியாக, மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பாக பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தானியங்கி மஞ்சப்பை இயந்திரம் அப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. அதனை இன்று தஞ்சை மாவட்ட ஆட்சித்தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் திறந்து வைத்தார்.

மேலும் மஞ்சப்பை தேவைப்படும் பயனாளிகள் இந்த இயந்திரத்தில் பத்து ரூபாய் நாணயத்தை செலுத்தினால், அவ்வியந்திரம் தானாக ஒரு மஞ்சள் பையினை வழங்குகிறது. இதனால் அப்பகுதியில் காய்கறிகள் மற்றும் பல்வேறுப் பொருட்களை வாங்க வரும் பொதுமக்கள் தாங்கள் வீட்டிலிருந்து துணிப்பைகளை எடுத்து வர மறந்து வந்து விட்டால் இனிக் கவலையில்லை, இத் தனியங்கி மஞ்சப்பை இயந்திரத்தில் பத்து ரூபாய் நாணயத்தை செலுத்தி மஞ்சப்பையினை பெற்றுக் கொள்ளாலம்.

மேலும் இதனால் பிளாஸ்டிக் பை பயன்பாடுகள் தவிர்க்கப்பட்டு இந்நகரம் பாதுகாக்கப்படுகிறது என்பதை அறிந்து, இப்பகுதி வாழ் பொதுமக்கள் இப்பயன்பாட்டினை பயன்படுத்தும் வகையில் இவ்வியந்திரம் அமைக்கப்பட்டுள்ளது. என மாவட்ட ஆட்சித்தலைவர் மக்களுக்கு அறிவுறுத்தினார்.

மேலும் அவர், தஞ்சை மாவட்டம் முழுவதும் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவும், அதன்படி பொதுமக்களின் பயன்பாட்டிற்காக பத்து ரூபாய் நாணயம் செலுத்தி மஞ்சள் பை பெற்றுக் கொள்ளும் இயந்திரம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பிளாஸ்டிக்கை தவிர்த்து இந்த மீண்டும் மஞ்சப்பை அல்லது துணிப்பை பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்தார்.

மேலும், இந்நிகழ்ச்சியில் கோட்டாட்சியர் பூர்ணிமா,  மாநகராட்சி ஆணையர் செந்தில் முருகன், வட்டாட்சியர் வெங்கடேஸ்வரன், உணவு பாதுகாப்புத் துறை அலுவலர் சித்ரா, காவல்துறை துணைத் கண்காணிப்பாளர் மகேஷ் குமார், திமுக ஒன்றிய செயலாளர் அசோக்குமார், தாராசுரம் அண்ணா நேரு காய்கறி மார்க்கெட் சங்கத் தலைவர் சிவபுண்ணியம், வாழைப்பழ வியாபாரிகள் சங்கத்தலைவர் குமார், மற்றும் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here