சென்னை, ஜன. 19 –
கடந்த வரும் ( 2022 ) ஆண்டு டாவோஸில் நடைப்பெற்ற உலகப் பொருளாதார மன்றத்தின் வருடாந்திர கூட்டத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் முதல் முறையாக இக்கூட்டத்தில் பங்கேற்றது.
அதனைத் தொடர்ந்து இவ்வாண்டும் டாவோஸில் நடைப்பெறும் இக்கூட்டத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் தமிழ்நாடு தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு உள்ளிட்ட அரசு உயர்மட்ட அலுவலர்கள் குழு பங்கேற்று, உலகின் முன்னணி மதலீட்டாளர்கள், தொழில் நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் பல்வேறு நாடுகளின் அரசாங்கப் பிரதிநிதிகளை சந்தித்து தமிழ்நாட்டில் முதலீடு செய்திடுவது குறித்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.
மேலும் தமிழ்நாடு முன்னைவிடவும், பெருமளவில் கலந்துக் கொண்டதோடு மட்டுமின்றி மாநிலத்தில் நிலவும் சிறப்பான பொருளாதார மற்றும் தொழில் புரிவதற்கான சூழல் மீது உலக முலீட்டாளர்களின் கவனத்தினை மிகப் பெரிய அளவில் ஈர்த்துள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் கடந்த ஆண்டை விடவும் இவ்வாண்டு நடைப்பெற்ற இக்கூட்டத்தில் அதிக அளவிலான உறுப்பினர்களுடன் இந்த உயர்மட்ட முதலீட்டுக்குழு, இந்நிகழ்வில் பங்கேற்றுள்ளதெனவும் அரசுதரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இக்குழு முதலீடு செய்ய விரும்பும் தொழில் முனைவோர்களுக்குத் தேவைப்படும் தகவல்களை அளித்து மாநிலத்தில் நிலவும் சிறப்பான முதலீடு மற்றும் பொருளாதாரச் சூழலையும் முதலீட்டிற்கான வாய்ப்புகளையும் எடுத்துரைப்பதன் மூலம் அந்நிறுவனங்களின் முதலீடுகளை தமிழ்நாட்டிற்கு ஈர்த்திடும் முயற்சிகளை மேற் கொண்டாதகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 2023 ஆம் ஆண்டுக்கான உலகப் பொருளாதார மையத்தின் துவக்க நிகழ்ச்சியாக, தமிழ்நாடு தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ப்ரோமனேட் 73 ல் உள்ள தமிழ்நாடு அரங்கை அதிகார பூர்வகமாக திறந்து வைத்தார் என அச்செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்நிகழ்வினால் பல்வேறு உலக முதலீட்டாளர்களை அது ஈர்த்த தாகவும், மேலும் தமிழ்நாட்டின் முதலீட்டுச் சூழ்நிலையை அறிந்து கொள்ள ஆர்வம் காட்டி வரும் பல தொழில் தலைவர்களையும், பொருளாதார வல்லுநர்களையும், தமிழ்நாடு அரங்கு பெருமளவில் ஈர்த்ததெனவும் குறிப்பிடப் பட்டுள்ளது.
மேலும் இக்கூட்டத்தின் வாயிலாக தமிழ்நாட்டின் முதன்மை குறிக்கோளாக உலகப் புகழ் பெற்ற தொழில் நிறுவனங்கள் மற்றும் அதன் பிரதிநிதிகள் ஆகியோர்களுடன் தொடர் சந்திப்புகள் மேற்கொண்டு, அவர்களின் முலீடுகளை ஈர்த்திடுவதற்கான வாய்ப்புகளை பெருக்குவதே ஆகும் எனவும், மேலும் நமது மாநிலம் சிறப்பான மற்றும் வலுவான பொருளாதார மற்றும் முதலீட்டுச் சூழல் நிலவிடும் மாநிலமாக விலங்குவதால், உலகளாவிய விநியோகச் சங்கிலி நெருக்கடிகளை நன்கு எதிர் கொள்ளும் திறன் கொண்டுள்ளதை, நமது முதலீட்டுக் குழு சந்திப்பு மேற்கொண்ட அனைத்து தரப்பினருக்கும் எடுத்துரைத்ததாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 10 மற்றும் 11 ல் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைப்பெறும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்துள்ள சூழ்நிலையில், இவ்வாறான உலகப் பொருளாதார மன்றத்தின் வருடாந்திர கூட்டத்தில் கலந்துக் கொண்டு நம் மாநிலத்தின் முலீட்டு சூழ்நிலையினை பரவலாக பிரகடனப் படுத்துவது, அந்நிகழ்வுக்கு பெருமளவில் முதலீட்டாளர்களின் வரவை அதிகரித்திடும் என்பதும் குறிப்பிடத் தக்கதாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நான்காம் தலைமுறை தொழில் வளர்ச்சியின் அடுத்த அத்தியாத்தை வழி நடத்துதல் என்ற தலைப்பில் அமைச்சர் தென்னரசு உரை நிகழ்த்திய அவர் அப்போது, தமிழ்நாடு அபார தொழில் வளர்ச்சியுடன் செழிப்பான மற்றும் நிலையான பொருளாதாரம் கொண்ட மாநிலமாக தமிழ்நாடு விளங்குவது மட்டுமின்றி உலகளாவிய உற்பத்தி மையமாக உருவெடுத்து வருவதையும் சுட்டிக்காட்டி உரை நிகழ்த்திய அமைச்சர் தொடர்ந்து தெற்காசியாவிலேயே முதல் மற்றும் ஒரே மேம்பட்ட உற்பத்திமையமாக தமிழ்நாடு திகழ்ந்து வருவதாகவும், நாட்காம் தலைமுறை தொழில் வளர்ச்சிக்கு ஏற்ற வகையில் தொழில் நுட்பங்களை மாற்றிக் கொள்வதிலும், உலகளவில், தமிழ்நாடு முன்னணியில் இருப்பதாக அப்போது எடுத்துரைத்தார் என அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இக்கூட்டத்தில் தமிழ்நாடு சார்பில் பங்கேற்ற உயர்மட்ட முதலீட்டுக் குழுவினர் பல்வேறு சந்திபுகள் மற்றும் நிகழ்வுகளில் கலந்துக் கொண்டதாகவும், மேலும் தமிழ்நாடு எரிசக்தி விநியோகச் சங்கிலியில் முலீடுகள் மேற்கொள்வதற்கான சூழலமைப்பு என்ற தலைப்பில் ஒரு வட்டமேசை விவாதம், நிலையான வளர்ச்சிக்கான மேம்பட்ட உற்பத்தி சுற்றுச்சூழல் அமைப்புகளை உருவாக்குதல் மற்றும் உலகளாவிய திறன் மையங்களை மறு வடிவமைத்தல் என்ற தலைப்பிலும் இரண்டு மதிய உணவு விவாதங்கள் ஆகியவை இக்குழுவினரால் மேற்கொள்ளப் பட்டதென அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்நிகழ்வில் ஏரளமான தொழில் தலைவர்கள், கல்வி மற்றும் அரசாங்கம் சார்ந்த பல உறுப்பினர்கள் இந்நிகழ்வில் ஆர்வத்துடன் கலந்துக் கொண்டனர் என அரசு தரப்பில் வெளியிட்ப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.