திருவள்ளூர், மே. 09 –

மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பீடி, சுண்ணாம்பு, கல் மற்றும் டோலமைட் சுரங்க தொழிலாளர்கள் மற்றும் சினிமா தொழிலாளர்கள் குழந்தைகளுக்கு 2022 – 2023 கல்வியாண்டு முதல் மாற்றியமைக்கப்பட்டு வழங்கப்படும் கல்வி உதவித்தொகை குறித்த அட்டவணையை மத்திய அமைச்சகம் நேற்று வெளியிட்டுவுள்ளது.

மேலும் இவ்வுதவித் தொகை பெற தேர்ச்சிப்பெற்று அடுத்த வகுப்பிற்கு செல்லும் மாணாக்கர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதிப்பெற்றவர்கள் எனவும் அவ்வறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி 1 முதல் 4 வரை படிக்கும் மாணாக்கர்களுக்க்கு புத்தகம் மற்றும் துணி வாங்குவதற்கு வருடத்திற்கு மாற்றியமைக்கபட்ட வகையில் ரூ. 250 யிலிருந்து ரூ 1000 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

5 முதல் 8 ஆம் வகுப்புவரை உள்ளவர்களுக்கு முன்னதாக பெண் குழந்தைக்கு ரூ.940 என்றும் ஆண் குழந்தைக்கு ரூ. 500 என இருந்த கல்வி உதவித்தொகை தற்போது மாற்றியமைக்கப்பட்ட வகையில் இருபாலருக்கும் ரூ. 1500 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

9 ஆம் வகுப்பு ம்படிப்பவர்களுக்கு முன்பு பெண்ணிற்கு 1140 என்றும் ஆணிற்கு 700 ஆகவும் இருந்த தொகை தற்போது ரூ. 2000 என இருபாலருக்கும் சம மாக வழங்கப்படுகிறது.

10 ஆம் வகுப்பு பெண் 1840 ஆண் 1400 என்று பெற்று வந்த தொகை தற்போது இருபாலருக்கும் ரூ. 2000 ஆயிரம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

11 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு மாணக்கார்களுக்கு முன்பு பெண் 2440 ஆண் 2000 ஆயிரம் பெற்று வந்த நிலையில் தற்போது இருபாலருக்கும் ரூ. 3000 ஆயிரம் என அறிவிக்கப்பட்டுள்ளது

ஐ.டி.ஐ பிரவு மாணாக்கர்களுக்கு முன்பு பெண் 10 ஆயிரம் ஆண் 10 ஆயிரம் என சரிவிகிதத்தில் வழங்கப்பட்ட கல்வி உதவித்தொகை தற்போது ரூ. 6000 ஆயிரம் என இருபாலருக்கும் குறைக்கப்பட்டு மாற்றியமைக்கப்பட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாலிடெக்னிக் மாணாக்கர்களுக்கு முன்பு வழங்கப்படாத கல்வி உதவித் தொகை இந்து கல்வியாண்டு முதல் இருபாலருக்கும் ரூ. 6 ஆயிரம் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதுப்போன்று பட்டப்படிப்பு விவசாய படிப்பு உள்ளிட்டவைகளுக்கு முன்பு இருபாலருக்கும் ரூ.3 ஆயிரம் வங்கப்பட்டு வந்தநிலையில் தற்போது ரூ 6 ஆயிரம் என உயர்த்தி வழங்கப்படுகிறது.

தொழில் சார்ந்த படிப்புகளுகளான பொறியியல், மருத்துவம், வணிக மேலாண்மை  ஆகியவற்றிற்கு முன்பு ரூ.15 ஆயிரம் என்று இருந்த நிலையில் தற்போது ரூ.25 ஆயிரம் என இருபாலருக்கும் மாற்யமைக்கப்பட்டு இந்த கல்வியாண்டு முதல் வழங்கப்பட்வுள்ளதாக அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here