திருப்பூர், மே. 09 –

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் முன்பு இன்று தமிழ்நாடு இந்து சேவா சங்கத்தின் திருப்பூர் மாவட்ட செயலாளர் காளிமுத்து தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

இந்த ஆர்ப்பாட்டம் தமிழ்நாடு இந்து சேவா சங்கம் மாநில தலைவர் ஆவடி ஸ்டாலின் ஆணைப்படி மாநில இளைஞரணி செயலாளர் சி. எஸ் ஆனந்தராஜ் வழிகாட்டுதல் படி திருப்பூர் மாவட்ட மாவட்ட செயலாளர் காளிமுத்து தலைமையில் நடைப்பெற்றது.

இந்த ஆர்பாட்டத்தில் யூடியூபர் விஜய் மற்றும் பெரு நகர சென்னை மேயர் ஆர் பிரியா தமிழ்நாடு காவல்துறை மற்றும் தமிழ்நாடு அரசை கண்டித்து கண்டன முழக்கங்களை ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்ட்டவர்கள் எழுப்பினார்கள்.

இந்நிகழ்வில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கார்த்திக் மாவட்ட பொருளாளர் சதாசிவம், மாவட்ட இளைஞரணி தலைவர் ஜெயவேல் மாவட்ட தொழிற்சங்க தலைவர் சேகர் மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளர் மருதுபாண்டி மகளிர் அணி பொறுப்பாளர்கள் மற்றும் மாநகர மாவட்ட ஒன்றிய கிளை பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்

இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். மேலும் யூடியூப் விஜய்யை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கோரியும், அம்மா உணவகம் மூடுவதற்கு முயற்சி செய்யும் திமுக அரசை கண்டித்தும், சென்னை மேயர் பிரியாவை கண்டித்தும், தொடர் மின்வெட்டு ஏற்படுத்தும் திமுக அரசை கண்டித்தும், தொடர் முழக்கங்களை எழுப்பினார்கள் பின்பு தமிழ்நாடு இந்து சேவா சங்கம் சார்பாக யூடியூபர் விஜய்யின் வீட்டை முற்றுகையிடுவோம் என்றும் நடவடிக்கை எடுக்காத காவல்துறையை கண்டித்தும் கண்டுகொள்ளாத அறநிலையத் துறையை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டகாரர்களின் முழக்கங்களாக முன்னிறுத்தப்பட்டது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here