தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே மரிக்குண்டு கிராமத்தில் பொம்மையசாமி பல்ல குண்டம்மாள் கோவில் அருகே பழங்காலத்தில் கட்டப்பட்ட ஸ்ரீ பரமசிவம் பார்வதி அம்மன் திருக்கோவிலின் திருப்பணி சிறப்பான முறையில் சீரமைக்கப்பட்டு அதன் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இக் கோவிலின் முதல்நாள் விழாவாக கிராமத்தின் தெற்கே எழுந்தருளிய பெரிய கோவிலிலிருந்து சுவாமியின் பீடத்தினை ஆதிகால முறைப்படி,தேவதும் பிமுழங்க தேவராட்டத்துடன் ஊர்வலமாக வந்து சுவாமியின் பீடத்தில் வைத்தனர்.அன்று இரவு முழுவதும் மகளியருக்கான கும்மியும்,ஆடவர்களுக்கான தேவரட்டத்துடனும் நடைபெற்றது.
இரண்டாம் நாள் ஸ்ரீபரமசிவம் பார்வதி அம்மனுக்கு பல புண்ணீய தலங்களிலிருந்து கொண்டு வரப்பட்ட தீர்த்தங்களை கலசத்திற்கு ஊற்றினார். காலை 8 மணி முதல் அன்னதானம் நடைப்பெற்றது.
மகளிருக்கான விரதம் இருந்து ஓம் நமச்சிவாய எழுதும் போட்டிகள் நடைப் பெற்றது இதில் வெற்றி பெற்ற மகளிருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் இவ்விழாவில் உள்ளுர் மற்றும் வெளியூர் பக்தர்கள் அம்மன் அருள் பெற்று சென்றனர்.