தேனி உழவர் சந்தை அருகே உள்ள மீறுசமுத்திரகண்மாயை தமிழக அரசு சார்பில் தூர் வாரும் பணி நடைபெற்று வருகிறது.இப் பணியில் தன்னார்வ தொண்டர்கள் பலர் விடுமுறை நாட்கள் மற்றும் வேலை நாட்களிலும் தங்களால் முடிந்த பணிகளில் ஈடுபட்டு வருகின்றனார். இதனைத் தொடர்ந்து இன்று தேனியின் தேனீக்கள் என்ற அமைப்பின் பேரில் இளைய தலைமுறை நன்பர்கள் குழுவின் மூலம் தூய்மை பணி நடைபெற்றது. மேலும் இந்த தூய்மை பணியில் தேனி மாவட்ட வழக்கறிஞர் சங்க தலைவர் mkm.முத்துராமலிங்கம் இளைய தலைமுறையின் இயக்குனர் மருததுரை, செயலாளர் அய்யப்ப ராஜ் , தலைமை ஒருங்கிணைப்பாளர் வினோத், மற்றும் தன்னார்வ தொண்டர்கள் ஏராளமானார் தூய்மை பணியில் ஈடுபட்டனார்.
செய்திகள் தேனி மாவட்டச் செய்தியாளர் செ.பரமசிவம்