வலங்கைமான், மார்ச். 03 –
திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் காவல் நிலையத்திற்கு இன்று பழனியில் இருந்து வந்த ஆதரவற்ற முதியவர் ஒருவர் தான் தன்னுடைய இறுதிக் காலத்தை புகழ்பெற்ற ஆலங்குடி குரு ஸ்தலத்தில் தங்கி தன்து இறைப்பணி ஆற்ற விரும்புவதாகவும், அக்காவல் நிலைய ஆய்வாளரிடம் தெரிவித்துள்ளார்.
மேலும் இதுக்குறித்து தாங்கள் கோயில் நிர்வாகத்திடமும் ஊராட்சி மன்ற தலைவரிடமும் தன்னை பேச அனுமதித் தரவேண்டுமெனவும் வலங்கைமான் காவல்நிலைய ஆய்வாளர் ராஜாவிடம் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து முதியவர் காவல் ஆய்வாளர் ராஜாவிடம் தனக்கென்று யாரும் உறவினர்கள் இல்லையெனவும், ஏற்கனவே தன்னுடைய வீட்டை உறவினர்கள் அபகரித்துக் கொண்டதாகவும் அதனால் தன்னுடைய இறுதி காலங்களை இந்த ஆலங்குடி குரு ஸ்தலத்தில் இருந்து இறைவனுக்கு இறைப்பணி செய்து வாழ விரும்புவதாகவும் அப்போது தெரிவித்துள்ளார்..
அதைத் தொடர்ந்து அம் முதியவருக்கு காவல் ஆய்வாளர் ராஜா ஆறுதல் கூறியும், உணவு வாங்கிக் கொடுத்தும், வழிப்பயணத்திற்காக ரூ. ஆயிரத்தை தனது சொந்த நிதியில் இருந்து கொடுத்து அவரை வழி அனுப்பி வைத்துள்ளார்.
அந் நிகழ்வினைக் கண்ட அங்கிருந்தவர்கள் மனம் நெகிழ்ந்து, காவல் ஆய்வாளர் ராஜாவிற்கு தங்களது பாராட்டையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தனர். இத்தகவலறிந்து பலரும் ஆய்வாளர் ராஜாவின் மனிதநேய செயலுக்கு தங்களது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.