தஞ்சாவூர், ஜன. 3 –

தஞ்சாவூர் மாவட்டத்தில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை மற்றும் வேளாண் விரிவாக்க சீரமைப்புத் திட்டத்தின் கீழ், உயர்தர உள்ளூர் பயிர் இரகங்களை பிரபலப்படுத்தும் கருத்துக்காட்சி மற்றும் கருத்தரங்கம் நடத்திடும் வகையில் கடந்த 2022 – 23 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் வேளாண்மைத்துறை சார்பில் அமைச்சர் செய்தி வெளியிட்டுயிருந்தார்.

அதன் அடிப்படையில் இரக மேம்பாடு, பகுதிக்கேற்ற சிறந்த இரகங்களை உருவாக்கும் நோக்கத்துடன் தமிழ்நாடு அரசின் வேளாண்மைத்துறை சார்பில் மாவட்டந்தோறும் ஆண்டுக்கு மூன்று முறை கண்காட்சி நடத்திட முடிவெடுக்கப்பட்டு, அதன் தொடர்ச்சியாக தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறை தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலையத்தில் எதிர்வரும் ஜனவரி 5 ஆம் தேதியன்று கருத்துக்காட்சி மற்றும் கருத்தரங்கமும் நடைப்பெறவுள்ளது.

இந்நிகழ்வில் விவசாயம் மற்றும் தோட்டக்கலை பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகள் தங்கள் பகுதி பாரம்பரிய உயர்தர உள்ளூர் இரகங்களை இக்கண்காட்சியில் காட்சிப்படுத்தலாம் என தஞ்சை மாவட்ட வேளாண்மைத்துறை சார்பில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

மேலும், இந்நிகழ்வில் விவசாயிகள் மற்றும் வேளாண் விஞ்ஞானிகளின் கலந்துரையாடல், பாரம்பரிய உணவு திருவிழா மற்றும் விவசாயிகளுக்கான பயிற்சியும் நடைப்பெறவுள்ளதாக அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே வேளாண், தோட்டக்கலை விவசாயிகள் தங்களது இரகங்களை காட்சிப்படுத்துவதற்கு கும்பகோணம், பாபநாசம், திருவிடைமருதூர், மற்றும் திருப்பனந்தாள் வட்டார வேளாண் உதவி இயக்குநர்களை இது தொடர்பாக தொடர்புக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், ஆர்வமுள்ள விவசாயிகளை தங்கள் பகுதியில் விளைந்த சிறந்த மருத்துவ பண்புகளைக் கொண்ட பாரம்பரியமிக்க உள்ளூர் உயர் இரகங்களை காட்சிப்பொருளாக வழங்கி, கண்காட்சியில் பங்கு கொண்டு விவசாயம் காத்து உணவு உற்பத்தியை பெருக்கிட வேண்டுமென கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் கலந்துக்கொள்ள விரும்பும் கும்பகோணம், பாபநாசம், திருவிடைமருதூர், திருப்பனந்தாள் வட்டார விவசாயிகள் அப்பகுதியில் உள்ள வேளாண்மை உதவி இயக்குநர்களை அணுகி தங்கள் பெயர்களை பதிவு செய்துக் கொள்ளுமாறு, தஞ்சை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் ந.க.நல்லமுத்துராஜா அறிவுறுத்தியுள்ளார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here