தஞ்சாவூர், ஏப். 23 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு…
வேருக்கடியில் சிக்கியிருந்த 11 ஆம் நூற்றாண்டை சேர்ந்த சோழர் காலத்து சிவலிங்கம் மீட்பு. மேற்கூரை அமைத்து பூஜைகள் செய்து கிராம மக்கள் வழிபாடு.
தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள அருந்தவபுரம் கிராமத்தின் குளக்கரையில் உள்ள அரசமரத்தின் வேருக்கடியில் சிவலிங்கம் இருப்பதை அப்பகுதி மக்கள் பார்த்துள்ளனர்.
உடனடியாக அதுக் குறித்து அரன் பணி அமைப்பினருக்கு கிராம மக்கள் தகவல் அளித்தனர். அதன் பெயரில் அங்கு வந்த அவர்கள் வேருக்கடியில் சிக்கியிருந்த சிவலங்கத்தை மீட்டு அங்கு மேற்கூரை அமைத்து வழிபாடுகள் நடத்தினர்.
மேலும் அவர்கள் கூறுகையில், தமிழ்நாடு, ஆந்திரா தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் சிதிலமடைந்து – பராமரிப்பு இன்றி கிடைக்கும் சிவலிங்கங்களை மீட்டு அதற்குரிய பூஜைகள் வழிபாடுகள் நடத்தி வருகிறோம். எனவும் அதேப் போல் இப்பகுதியில் சிவலிங்கம் ஒன்று இருப்பதாக பகுதி மக்கள் தங்களுக்கு தகவல் தெரிவித்தனர். எனவும் அதன் பேரில் இங்கு வந்துப் பார்த்தபோது வேருக்கடியில் சிக்கியிருந்த சிவலங்கத்தை மீட்டு அதற்கு வழிபாடு நடத்தினோம். என்றனர்.
மேலும் அருகில் உள்ள சிவாலயத்தை சேர்ந்த லிங்கமாக இருக்க வாய்ப்பு இருக்கிறது. இந்த சிவலங்கத்தின் உயரம் 3.5 அடியாக உள்ளது. இது பிற்கால சோழர்கள் காலத்து சிவலிங்கமாக இருக்கலாம் எனவும் மேலும் 11 ஆம் நூற்றாண்டை சேர்ந்ததாக இருக்கலாம் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.