திருவள்ளூர், டிச. 17 –

திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அம்மையார் குப்பம் 6 வார்டுக்குட்பட்ட சக்தியம்மன் கோவில் கிழக்கு தெருவில் சுமார் 100 கணக்கான குடும்பங்கள் வசிக்கின்றன. இத்தெருவின் வழியாக செல்லும், கழிவுநீர் கால்வாயில் இருந்து வாரந்தோறும் மனித மலக்கழிவுடன் வெளியேறி அத்தெருக்களில் உள்ள வீட்டு வாசல்களில் குளம் போல் தேங்கி துற்நாற்றம் மற்றும் தொய்தொற்று ஏற்படுத்தும் சூழல் வெகுநாட்களாக இருந்து வருகிறது. இதுக் குறித்து ஊராட்சி தலைவர் மற்றும் அலுவலரிடம்  பலமுறை புகார் மனுவை அப்பகுதி மக்கள் அளித்தும் இது நாள் வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வருவதால் குடியிருப்புக்குள் இருக்க முடியாமலும் உணவு உட்கொள்ள முடியாலும் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் தொடர் வேதனையுடன் வசித்து வருவதாக அப்பகுதி மக்கள் புகார்களை தெரிவிக்கின்றனர்.

 மேலும் இப்பகுதியில் பெரும் குடிநீர் தட்டுபாடும் நிலவி வருவதாகதவும், வீட்டின் திடக்கழிவுகளை பிரித்து போடுவதற்கான குப்பைத்தொட்டிகள் அமைத்து தருவதால் தெருக்களில் தேவையில்லாமல் குப்பைக் கழிவுகளை சிதறிக்கிடப்பதும் அதனால் ஏற்படும் நோய்தொற்று தவிர்க்கப்படும் எனவும் அப்பகுதிமக்கள் கோரிக்கை வைக்கின்றனர், மேலும் இப்பகுதி பிரச்சினைகளை தொடர்ந்து புறக்கணிக்காமல் உடனடியாக மக்களின் அடிப்படை வசதிகளை செய்து தரும்படி ஊராட்சி நிர்வாகத்தை வலியுறுத்தியும், ஒன்றிய மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு அறிவுறுத்துவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here