பொன்னேரி, ஏப். 09 –
பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் கோடை வெயிலின் தாக்கத்தை போக்க அதிமுக தலைமை கழகம் அறிவுறுத்தலின் பேரில் திருவள்ளூர் வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் இன்று நீர். மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. அதனடிப்படையில் சோழவரம் ஒன்றியம் அடங்கிய ஜனபசத்திரம் .தச்சூர் கூட்டுசாலை. ஆண்டார்குப்பம் . மீஞ்சூர் ஒன்றியத்தில் அடங்கிய பொன்னேரி அண்ணா சிலை உள்ளிட்ட 4 இடங்களில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.
இவ்விழாவிற்கு திருவள்ளூர் வடக்கு மாவட்டகழக அதிமுக செயலாளர் சிறுணியம் பி.பலராமன் தலைமை வகித்து நிகழ்ச்சியை துவக்கிவைத்தார். முதல்நாளான இன்று அதிமுக கட்சிக்கொடியினை ஏற்றி வைத்தும் எம்.ஜி.ஆர். ஜெயலலிதாவின் திருவுருவ படங்களுக்கு மாலைஅணிவித்து மரியாதை செலுத்தினார். பின்பு அப்பகுதி பொதுமக்களுக்கு தர்பூசணி. இளநீர். வெள்ளரிப்பிஞ்சு. ரஸ்னா போன்ற குளிர்பானங்கள் உள்ளிட்டவைகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினர் பொன் ராஜா. மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணை செயலாளர் பானுபிரசாத். பொதுக்குழு உறுப்பினர் பொண்ணுதுரை. பஞ்சட்டி ஊராட்சி மன்ற தலைவர் சீனிவாசன், மாநில எம்ஜிஆர் மன்ற இளைஞரணி துணை செயலாளர் நடராஜன் .மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் சுதாகர் . பொன்னேரி நகர செயலாளர் உபயதுல்லா துணை செயலாளர் சலீம் மீஞ்சூர் வழக்கறிஞர் மாரி உள்ளிட்ட திரளான அதிமுக ஒன்றிய .பேரூர். ஊராட்சி கிளை. கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.