நன்னிலம், மே. 12 –

முன்னாள் முதலமைச்சரும், அதிமுக கட்சியின் பொதுச்செயலாளருமான  எடப்பாடி கே. பழனிச்சாமி 69 ஆவது பிறந்தநாள் விழாவினை அக்கட்சியினர் பொதுமக்களுக்கு பல்வேறு நல உதவிகள் வழங்கி வெகுச் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.

அதனைத் தொடர்ந்து திருவாரூர்மாவட்டம் நன்னிலத்தில் அம்மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ஆர். காமராஜ் அறிவுறுத்தலின் படி அக்கட்சியினர் பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும்  மரக்கன்றுகள் வழங்கி இப்பிறந்தநாள் விழாவினைக் கொண்டாடினார்கள்.

மேலும், நன்னிலம் பேரூர் அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில் தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் செல் சரவணன் தலைமையில் இவ்விழா வெகுச்சிறப்பாக நடைப்பெற்றது. அதில் பங்கேற்ற நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் மரக்கன்றுகளை செல் சரவணன் வழங்கினார்.

இந்த நிகழ்வில்வின் போது, வைரம், அக்ரி நடராஜன், ஆட்டோ அசோக், கலைவாணி, கவிதா, கதிர்வேல், புளிச்சக்காடி  அசோக், கோவிந்தராஜ், தர்மா உள்ளிட்ட திரளான அதிமுகவினர் அவருடன் உடனிருந்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here