சென்னை, ஜூலை. 30 –

இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி ஆணையரகம், அரும்பாக்கம், சென்னை 2023 – 2024 ஆம் கல்வியாண்டிற்கான பி.என்.ஒய்.எஸ். யோகா மற்றும் இயற்கை மருத்து படிப்பிற்கான சேர்க்கைக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதன்படி, 2023 – 2024 ஆம் கல்வியாண்டில் அரசு மற்றும் சுயநிதி யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு & அரசு ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான பி.என்.ஒய்.எஸ். யோகா மற்றும் இயற்கை மருத்து படிப்பு 5.1/2 ஆண்டுகள் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் தனித்தனியாக தகுதியானவர்களிடம் இருந்து வரவேற்கப்படுவதாக தெரிவித்துள்ளது. மேலும் அதற்கான கல்வித்தகுதி +2 என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் மேற்கண்ட பட்டப்படிப்புகளுக்கான விண்ணப்பப்படிவம், தகவல் தொகுப்பு ஏட்டினை www.tnhelth.tn.gov.in என்ற வலைதளத்தில் பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம் எனவும், மேலும் ஆணையரக அலுவலகத்திலோ அல்லது தேர்வுக்குழு அலுவலகத்திலோ, வேறு எந்த ஆயுஷ்முறை மருத்துவக்கல்லூரிகளிலோ விண்ணப்பப் படிவங்கள் வழங்கப்படமாட்டது எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள், விண்ணப்பக் கட்டணம் மற்றும் பிறக்கட்டணவிவரங்கள், கலந்தாய்விற்கான அட்டவணை மற்றும் பிற தகவல்களினை மேலேக் குறிப்பிட்டுள்ள இணையதளத்தில் உள்ள உரிய தொகுப்பேட்டில் அறிந்துக்கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம், கோரப்பட்டுள்ள அனைத்துச் சான்றிதழ்களின் சுய சான்றொப்பமிட்ட நகல்களையும் இணைத்து செயலாளர், தேர்வுக்குழு, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை ஆணையர் அலுவலகம், அறிஞர் அண்ணா அரசினர் இந்திய மருத்துவமனை வளாகம், அரும்பாக்கம் சென்னை – 600 106 என்ற முகவரிக்கு எதிர்வரும் ஆகஸ்ட் 14.08.2023 ஆம் தேதி மாலை 5.30 மணிக்குள் சமர்பித்தல் வந்து சேர வேண்டுமென ஆணையரகம் அறிவித்துள்ளது.

இன்று முதல் ( ஜூலை 30 முதல் ஆக 14 மாலை 5 மணிவரை விண்ணப்ப படிவம் மற்றும் தகவல் தொகுப்பேட்டினை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம். மேலும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நேரிலோ அல்லது கூரியர் சேவை வாயிலாகவோ ஆக 14 ஆம் தேதி மாலை 5.30 மணிக்குள் சமர்ப்பிக்கும் படி ஆணையரகம் அறிவுறுத்தியுள்ளது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here