காஞ்சிபுரம், ஏப். 05 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் …

காஞ்சிபுரம் நாடாளுமன்ற தனி தொகுதி அதிமுக வேட்பாளரை ஆதரித்து நடிகை வித்யா பிரச்சாரம் மேற்கொண்டார். திமுக விடம் உரிமைகளும் பாதுகாப்பையும் மீட்டெடுத்து சுதந்திரத்தை கொடுக்க புறா விட்டு பிரச்சாரம் திமுகவையும் பாஜகவையும் உள்ள வித்தியாசத்தை அடுக்கு மொழியில் எட்டு கட்டி பேசி பரப்புரையில் ஈடுபட்ட  நடிகை வித்யா

காஞ்சிபுரம் அடுத்த வாலாஜாபாத் பேருந்து நிலையத்தில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தனி தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிடும் ராஜசேகர் அவர்களை ஆதரித்து திரைப்பட நடிகையும் அதிமுகவின் கொள்கை பரப்பு துணை செயலாளருமான விந்தியா திமுக மற்றும் பாஜக மீது கடும் விமர்சனம் செய்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது பேச்சு தொடங்குவதற்கு முன்பு திமுகவிடம் உரிமைகளும் பாதுகாப்பையும் மீட்டெடுத்து சுதந்திரத்தை கொடுக்க புறா விட்டு பிரச்சாரம் மேற்கொண்டார்

அப்போது பேசுகையில் திமுகவையும் பாஜகவையும் உள்ள வித்தியாசத்தை அடுக்கு மொழியில் எட்டு கட்டி பேசி பரப்புரையில் ஈடுபட்டபோது

ஆனால் பாஜக மாற்றுக் கட்சி அல்ல ஏமாற்றும் கட்சி திமுக விற்கும் பாஜகவிற்கும் பெரிய வித்தியாசம் கிடையாது திமுக பயங்கரமாக பொய் சொல்லும் பாஜக சொல்ற பொய்யை பயங்கரமா சொல்லும் திராவிட மாடல் என்று ஏமாற்றும் திமுகவையும் இந்திய மாடல் என்று ஏமாற்றும் பாஜகவையும் தோற்கடிக்க வேண்டும் திமுக கடவுளை திட்டிக்கொண்டே சாமி கும்பிடும் பாஜக கடவுளே திட்டுற மாதிரி சாமி கும்பிடும் ஸ்டாலின் மகனைப் பற்றி மட்டுமே யோசனை செய்வார் மோடி மதத்தை மட்டுமே பற்றி யோசனை செய்வார் ஸ்டாலின் மகன் மகள் மருமகனுக்கு பினாமி மோடி அம்பானி அதானிக்கு பினாமி திமுக மக்களிடம் மட்டுமே திருடுவார்கள் பாஜக மாநிலங்களை மட்டுமே திருடுவார்கள் திமுக திருட்டில் ஸ்பெஷலிஸ்ட் பாஜக உருட்டுவதில் ஸ்பெஷலிஸ்ட் இந்த தேர்தலில் திருந்தாத பாஜகவையும் திருட்டு திமுகவையும் ஒழித்துக் கட்டுவதற்கு பொதுமக்கள் தங்களது ஒற்றை விரலால் ஓங்கி அடிக்க வேண்டும் சதிகார திமுகவையும் சர்வாதிகார பாஜகவையும் தோற்கடிக்க வேண்டும்

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here