ஆவடி, மே. 09 –
சென்னை அடுத்த ஆவடி அருகே திருமுல்லைவாயலில் கடந்த 7 ஆம் தேதி தனியார் பள்ளியில் நீட் நுழைவு தேர்வு நடைபெற்றது. இத்தேர்வினை எழுத திருத்தணியைச் சேர்ந்த பள்ளி மாணவி ஆனந்தி வயது 18 தனது பெற்றோருடன் வந்திருந்தார்.
ஆனால் மாணவி தவறுதலாக வேறொரு பள்ளிக்கு சென்று விட்டார் அந்த பள்ளி முன்பு நின்று அழுது கொண்டிருந்த மாணவி மற்றும் அவர் பெற்றோரை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போக்குவரத்து காவலர்கள் தனசேகரன் மற்றும் தினேஷ் குமார சாமி ஆகிய இருவரும் சேர்ந்து மாணவி எழுத வேண்டிய தேர்வு மையத்திற்கு போலீஸ் வாகனத்தில் கொண்டு வந்து சேர்த்து தேர்வு எழுத உதவி செய்தனர்
இத்தகவலறிந்த ஆவடி மாநகர கமிஷனர் சந்தீப் ராய் ரத்தூர் ஐபிஎஸ், பள்ளி மாணவிக்கு சமயத்தில் உதவி செய்த இரு காவலர்களையும் நேரில் அழைத்து சான்றிதழ் மற்றும் வெகுமதி கொடுத்து வெகுவாக பாராட்டினார்.