திருவையாறு, ஏப். 27 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு…

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு பூ போடும் நிகழ்ச்சியில் போதிய  போலீஸ் பாதுகாப்பு குறைபாடு காரணமாக  ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூட்ட நெருசலிலிருந்து வெளியேற முடியாமல்  சிக்கித் மாட்டிக்கொண்டு மயங்கி விழுந்த பெண்.

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் உள்ள பிரசித்தி பெற்ற ஐயாறப்பர் கோவில் சித்திரை விழாவை முன்னிட்டு கடந்த 14ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவினை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சி கோயிலில் நடைபெற்றது.

இந்த நிலையில் ஏலூர் சாமி புறப்பாடு என்கின்ற முக்கிய நிகழ்வான சப்தஸாணம் விழா தொடங்கியது  இதையடுத்து திருப்பழனம், திருசோற்றுத்துறை, திருவேதிகுடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி, தில்லை ஸ்தானம், உள்ளிட்ட பல்லாக்குகள் புறப்பட்டு திருவையாறு ஐயாறப்பர் கோயில் முன்பு தேரடியில் சங்கமித்தது. சுற்று வட்டார கிராம பகுதியில் இருந்து பல ஆயிரம் கணக்கான பக்தர்கள் கூடினர்.

பக்தர்களுக்கு ஏற்ற உரிய பாதுகாப்பும் போதிய போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தவில்லை  அதனால் கூட்டு நெரிசலில் சிக்கிக்கொண்டு பெண்கள்,  குழந்தைகள், முதியவர்கள், மாட்டிக்கொண்டு மிகவும் சிரமப்பட்டனர் கூட்டத்திலிருந்து வெளியேற முடியாமல் தவித்து கொண்டு இருந்தனர்.

கூட்ட நெரிசலில் ஒரு பெண் மயங்கி விழுந்தார் உடனடியாகத் அந்தப் பெண்ணை மீட்டனர்  கூட்ட நெரிசலில் இளைஞருக்குள் ஒருவருக்கு ஒருவர் சண்டையும் நடைபெற்றது. ஆண்டுதோறும் பல ஆயிரம் கணக்கான பக்தர்கள் கலந்து கொள்ளும்  விழாவிற்கு உரிய பாதுகாப்பு  போலீஸ் பாதுகாப்பு  ஏற்படுத்த வேண்டும் என்றும் சமூக ஆர்வலரும் பொதுமக்களும் கோரிக்கை விடுக்கின்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here