கும்மிடிப்பூண்டி, ஆக. 01 –

கும்முடிப்பூண்டி அடுத்த மாதர்பக்கம் தனியார் திருமண மண்டபத்தில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட அமமுக கட்சியின் செயலாளர் அனுப்பம் பட்டு பி.வி சங்கர்ராஜா தலைமையில் நடைப்பெற்ற நிர்வாகிகள் கூட்டம், புதிதாக மகளிரை கட்சி உறுப்பினராக சேர்த்தல் மற்றும் மகளிருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வென முப்பெரும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.

மேலும் இக்கூட்டத்திற்கு மாவட்ட மகளிர் அணி செயலாளர் மாலதி, கும்மிடிப்பூண்டி மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர் ஆர்.முனிரத்தினம்,  கும்மிடிப்பூண்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் சுரேஷ். எல்லாபுரம் வடக்கு ஒன்றிய செயலாளர் ஈஸ்வரன். பொதுக்குழு உறுப்பினர் ரகுபதி . உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

 

இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற அமமுக கட்சியின் துணைப் பொதுச் செயலாளரும். மண்டல பொறுப்பாளருமான  ஜி. செந்தமிழன் நிர்வாகிகளிடையே பேசுகையில் கடந்த ஐந்து ஆண்டுகளாக மக்களை வஞ்சிக்கும் ஆட்சிதான் தற்போது வரை நடைபெற்று வருவதாகவும், மேலும், எடப்பாடி ஆட்சியில் புரட்சித்தலைவி அம்மா கொண்டு வந்த அனைத்து திட்டங்களும் புறக்கணிக்கப்பட்டதாலே அவர் ஆட்சியை இழந்தார் எனத் தெரிவித்தார்.

 

தொடர்ந்து அவர் பேசுகையில் அதைப்போன்றே கடந்த ஒரு வருட கால திமுக ஆட்சியில் மக்களை ஏமாற்றி ஓட்டை மட்டும் பெற்றுக் கொண்டு கடுமையான விலைவாசி ஏற்றம்,. மின் கட்டண உயர்வு என அனைத்தும் மக்கள் தலையில் கட்டி விட்டு கலைஞருக்கு 134 கோடியில் அவர் பயன்படுத்திய பேனாவுக்கு சிலை அமைத்தல் என்ற செயலில் முதல்வர் ஈடுப்பட்டு வருகின்றார். அதற்கு ஒரே காரணம் கலைஞர் அவரது  தந்தை என்பதால் மட்டுமே என்று தெரிவித்தார். இதனால் முதல்வர் மக்கள் வளர்ச்சி பணிகளில் கவனம் செலுத்தாமல் மக்கள் வரிப்பணத்தை வீணடித்துக் கொண்டு வருவதாக குற்றம் சாட்டினார். மேலும், விரைவில் திமுக ஆட்சி தூக்கி எறியப்பட்டு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் ஆட்சி அமைக்கும் என தெரிவித்தார்.

 

இந்நிகழ்ச்சியில் திரளான கட்சித் தொண்டர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர். முன்னதாக மாதர் பாக்கம் ஊராட்சியில் கட்சிக் கொடியை செந்தமிழன் ஏற்றி வைத்து இனிப்புகளை வழங்கினார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here