மயிலாடுதுறை, ஏப். 14 –

தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் …

தருமபுர ஆதீனத்தில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பாரம்பரியமான பஞ்சாங்கம் படித்தல் நிகழ்வு நடைப்பெற்றது. அந்நிகழ்வின் போது, பனை விசிறி, பஞ்சாங்கம் மற்றும் வெத்தலை பாக்கு வைத்து தருமபுர ஆதீன மடாதிபதி பக்தர்களுக்கு வழங்கினார்.

மயிலாடுதுறை மாவட்டம், தருமபுரம் ஆதீனத்தில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பாரம்பரியமான பஞ்சாங்கம் படித்தல் நிகழ்ச்சி தருமபுர ஆதின மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் நடைபெற்றது.

குரோதி  வருட பஞ்சாயத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்து பின்பு வேதியர்கள் பஞ்சாங்கத்தில் உள்ள பலன்களை வாசித்தனர். இந்த குரோதி ஆண்டு  மழை குறைவான அளவாக இருக்கும் என்றும் தானிய விளைச்சல் மத்திமான அளவு இருக்கும் என்றும் மக்கள் சுபிட்சமாக வாழ்வார்கள் என்றும்,  திருடர்கள்,  நெருப்பு,  இவற்றால் ஆபத்து எற்படும் என்பதால்  மக்கள் இறை வழிபாட்டை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என்று இந்த ஆண்டு பலன் சொல்லப்பட்டுள்ளது.

அவற்றை வாசித்த பின்பு பக்தர்களுக்கு புதுவருட பஞ்சாங்கம் பனைஓலை விசிறி கொட்டை பாக்கு வெற்றிலை ஆகியவற்றை பாரம்பரிய முறைப்படி தருமபுரம் ஆதீனம் மடாதிபதி பக்தர்களுக்கு வழங்கி ஆசி கூறினார். நூற்றுக்கணக்கான பக்தர்கள் அந்நிகழ்ச்சியில் பங்கேற்று பஞ்சாங்கம் வாசிப்பதை கேட்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here