கும்பகோணம், மார்ச். 16 –
கொரோனாவிற்கு பின் இந்தியா, குறிப்பாக தமிழகம், வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு, தொற்று பாதிப்பின்றி, பாதுகாப்பானதாக உள்ளதா ? என்பது குறித்து பிரான்ஸ் நாட்டையை சேர்ந்த 4 பேர் கொண்ட குழுவினர் ஆய்வு நடத்தினர்.
இதன் ஒரு பகுதியாக, தமிழர் கலாச்சாரத்தை போற்றிடும் வகையில் அவர்கள் வேட்டி சேலை அணிந்து, நமது பாரம்பரிய கலைகளான பறை, கரகம், மயிலாட்டம், ஒயிலாட்டம், சிலம்பம் ஆகியவற்றை பெரிதும் ரசித்து மகிழ்ந்தனர். தொடர்ந்து அவர்கள் அறுவடை நடைபெற்ற நெல் வயலுக்கும் சென்று, கூலித் தொழிலாளர்களுடன் இணைந்து நெல் அறுவடையும் செய்து மகிழ்ந்தனர்.
உலக அளவில், கொரோனா தொற்று மெல்ல மெல்ல குறைந்து வரும் வேளையில், பெரிய அளவில் சரிவை சந்தித்த சுற்றுலாத்துறையும் வெளிநாட்டு பயணிகளை கவர தங்கள் நாட்டிற்கு வரவழைக்க பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது
இந்தியாவிற்கு வெளிநாட்டு பயணிகள் வருகை மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது, குறிப்பாக தமிழகத்திற்கு, காரணம் உலக அளவில் பரந்து விரிந்திருக்கும், தமிழர்களின் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரமும் ஆகும், தமிழக மக்களின் கலாச்சாரம் நாகரிகத்தை தெரிந்து கொள்வதற்காக பிரான்ஸ் நாட்டில் இருந்து 4 பேர் கொண்ட குழுவினர், தமிழர்களின் பாரம்பரியம்பரியத்தை போற்றிடும் வகையில், நமது பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை, சேலை, அணிந்து பறை, கரகாட்டம், ஒயிலாட்டம், சிலம்பாட்டம் ஆகியவற்றை கண்டு ரசித்தனர்
கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த இரு ஆண்டுகளாக, வெளிநாட்டில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை கணிசமாக குறைந்தது. தற்போது கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், வெளிநாடுகளில் இருந்து தஞ்சாவூர் மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
கும்பகோணம் அருகே பாபநாசம் வட்டம் ஆடுதுறை பெருமாள் கோவில் என்ற குக்கிராமத்திற்கு இன்று, பாரிஸ் நகரத்தில் இருந்து வந்திருந்த கிறிஸ்டியன், ஹார்வே, மார்க் கிறிஸ்டியன், கேத்தரின் என்ற நான்கு சுற்றுலா பயணிகள் தமிழர்களின் கலை கலாச்சாரத்திற்கு ஈர்க்கப்பட்டு வேட்டி சட்டை மற்றும் சேலை அணிந்து தமிழர்களை போலவே காட்சியளித்தனர்.
இவர்கள் தமிழ்நாடு கேரளா ஆகிய இரு மாநிலங்களில் மூன்று வார காலத்திற்கு பல்வேறு இடங்களை பார்வையிட்டு வருகின்றனர். கடந்த இரண்டு நாட்களாக கும்பகோணம், பாபநாசம் ஆகிய வட்டங்களில் உள்ள பழமையான கோவில்கள் வயல்வெளிகள், அறுவடை நிலங்கள் போன்றவற்றை பார்வையிட்டனர் என்பது குறிப்பிடதக்கது தமிழர்களின் கலை, கலாச்சாரம், நாகரீகம், விருந்தோம்பல் பண்பு, நட்புடன் பழகும் விதம், உணவுகள் பழக்கவழக்கங்கள் தங்களை பெரிதும் ஈர்த்துள்ளதாக பாரிஸ் நாட்டு சுற்றுலா பயணி மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். தற்போது இந்தியாவில் தொற்று பாதிப்பு பெரிய அளவில் குறைந்துள்ளதால் இனி வரும் நாட்களில் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் இந்தியாவிற்கு, குறிப்பாக தமிழகத்திற்கு வருவார்கள் என நம்பப்படுகிறது.
பேட்டி : 1. ஹார்வே சுற்றுலா பயணி
சிந்து சுற்றுலா நிறுவன பொறுப்பாளர்