கும்பகோணம், ஏப். 11 –

தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்..

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரத்தில் ஆண்டு தோறும் வரும் மற்ற மாதங்களை விட,  ரம்ஜான் பெருநாள் வரும் மாதமே இஸ்லாத்தில் சிறந்த மாதமாகக் கருதப்படுகிறது.

மேலும் அம்மாதம் இறைவனை நெருங்கும் மாதமாகவும், சொர்க்க வாசல்கள் திறக்கப்பட்டு, நரக வாசல்கள் மூடப்படும் மாதமாகவும், நன்மைகள் அதிகம் கிடைக்கும் மாதமாகவும் இஸ்லாமியர்கள் கருதுகின்றனர்.

நன்மை,  தீமைகளைப் பிரித்து அறிவிக்கும் குர்ஆன் உலகிற்கு இறைவனால் வழங்கப்பட்டதும், இம்மாதம் என்பதால் அம்மாதம் முழுவதும் நோன்பு இருந்து ரம்ஜான் பண்டிகையினை இஸ்லாமியர்கள் கொண்டாடுகின்றனர்.

புனித ரமலான் மாதமானது நேற்று முன் தினத்துடன் நோன்பு முடிவடைந்த நிலையில், ரம்ஜான் ஈகைப் பெருநாள் நேற்று கொண்டாடப்பட்டது.

சாந்தி நகர் திடலில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் மாநில பேச்சாளர் கலந்தர், தலைமையில்  நடைபெற்ற சிறப்பு தொழுகையில் புத்தாடைகள் அணிந்து பெண்கள் குழந்தைகள் உள்ளிட்ட ஏராளமான இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் பங்கேற்று இஸ்லாமியர்கள், ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here