திருவாரூர், ஏப். 23 –

திருவாரூர் மாவட்டம், பவித்திரமாணிக்கம் அரசு கிளை நூலகத்தில், வாசகர் வட்டம் சார்பில், நேற்று கருத்தரங்கம் நடைபெற்றது.

மேலும் அவ்விழாவிற்கு, வாசகர் வட்டம் தலைவர் ப. அழகிரிசாமி தலைமை தாங்கினார். மேலும், அதன் துணைத்தலைவர் கோ.இராசவேல் முன்னிலை வகித்தார்.

மேலும் இநவ்விழாவில், கும்பகோணம் ஜோதிமலை இறைபணி திருக்கூட்டம் நிறுவனர், தவத்திரு. திருவடிக்குடில் சுவாமிகள் கருத்தரங்கத்தை தொடக்கி வைத்து உரை நிகழ்த்தினார். மேலும், முனைவர். பாரதி சிறப்புரை நிகழ்த்தினார்.

அதனைத் தொடர்ந்து பள்ளிக்குழந்தைகள் இந்நிகழ்வில் உரை நிகழ்த்தினார்கள். தொடர்ந்து அப்பள்ளிக் கழந்தைகள் தேவாரத் திருமுறைகளை பாராயணம் செய்து ஒப்புவித்தார்கள்.

மேலும், அந் நூல்நிலையத்தில் உள்ள தங்களுக்குப் பிடித்தமான புத்தகங்களை வாசித்து கதை கூறினார்கள். புத்தகங்கள் என்கின்ற அற்புத உலகின் வாசல்களை அவர்களுக்கு திறந்து காட்டும் நிகழ்வாக அந்நிகழ்வு அமைந்தது.

மேலும் இந்நிகழ்வில் நல்நூலகர் திருமதி. ஜெ. குமாரி நன்றியுரை நிகழ்த்தினார். மேலும், நல்லாசிரியர் புலவர் எண்கண். சா.மணி இந்நிகழ்ச்சி நிரல்களை வெகுச் சிறப்பாக ஒருங்கிணைத்திருந்தார்

மேலும் இந்நிகழ்வில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவ, மாணவியர், தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் வாசகர்கள் உள்ளிட்டவர்கள் இந்நிகழ்வில் பங்கேற்று சிறப்புச் சேர்த்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here